சென்னையில் ரயில்வே போலீசாரை கிண்டல் செய்து நடனமாடிய பெண் - வைரல் வீடியோ

சென்னயைில் ரயில்வே போலீசாரை கிண்டல் செய்து நடனமாடிய பெண்

பாதுகாப்பு பணியில் இருந்த பெண் ரயில்வே காவலர்கள், அவரிடம் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

 • Share this:
  சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெண் ஒருவர், ரயில்வே போலீசாரை கிண்டல் செய்து பாட்டுப்பாடி நடனமாடிய காட்சி வெளியாகி உள்ளது.

  சேத்துப்பட்டு ரயில் நிலையத்தின் நடைமேடையில் பெண் ஒருவர் முகக்கவசம் அணியாமல் இருந்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் ரயில்வே காவலர்கள், அவரிடம் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதனையடுத்து முகக்கவசத்தை அணிந்துகொண்ட அவர், போலீசாரை கிண்டல் செய்து சினிமா பாடல் பாடி நடனமாடி உள்ளார்.  இதனையடுத்து அப்பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவரது பெயர் சரித பிரியா என்பதும், அவர் பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணம் செய்ததும் தெரியவந்தது. பின்னர் தவறை உணர்ந்த அப்பெண் போலீசாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்த போலீசார், இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாதென எச்சரித்து அனுப்பினர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: