மூல பொருட்கள் விலை உயர்வு: முடங்கும் நிலையில் அச்சக தொழில்... தொழிலாளர்கள் வேதனை
மூல பொருட்கள் விலை உயர்வு: முடங்கும் நிலையில் அச்சக தொழில்... தொழிலாளர்கள் வேதனை
முடங்கும் நிலையில் அச்சக தொழில்
Chennai District | மூலப்பொருட்களின் விலை உயர்வால் கடுமையாகபாதிக்கப்பட்டு தொழில் நடத்த முடியாமல் தொழிலை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்
பள்ளிக்கூட புத்தகங்கள் தொடங்கி வீதிகளில் ஒட்டப்படும் போஸ்டர்கள் வரை பிரிண்டிங் பிரெஸ் என்று அழைக்கப்படும் அச்சகத்தில் தான் வடிமைக்கப்படுகிறது. ஆனால் அச்சக தொழிலில் உள்ள மிக முக்கிய மூலப்பொருள்களான பேப்பர், பிளேட் , இங்க் , கெமிக்கல் போன்ற முக்கிய பொருள்களின் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது.
மூல பொருட்கள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் கடந்த ஜனவரி 1, 2022 முதல் 20% உயர்த்தப்படும் என அறிவித்த நிலையில் மீண்டும் அதே நிறுவனங்கள் ஏப்ரல் 1, 2022 முதல் மேற்கண்ட மூலப்பொருள்களின் விலை 40% உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால் அச்சக தொழிலில் உள்ள சிறுகுறு தொழில் முனைவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தொழிற்சங்க பொது செயலாளர் தெரிவிக்கையில், வாடகைக்கு இடம் எடுத்து வங்கியில் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி தொழில் நடத்துகின்ற சிறு,குறு தொழில் முனைவோர் இந்த விலை உயர்வால் கடுமையாகபாதிக்கப்பட்டு தொழில் நடத்த முடியாமல் தொழிலை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அச்சக தொழிலில் தமிழகம் முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட வகையில் சிறுகுறுதொழில்புரிவோர் மற்றும் அதனைச்சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அச்சக உரிமையாளர் தெரிவிக்கையில், மூலப்பொருள்களின் விலையேற்றத்தை தமிழக அரசு கட்டுப்படுத்திடவேண்டும். ஜி.எஸ்.டி. வரி 18 சதம் என்பதை மத்திய அரசு குறைக்க வேண்டும். அச்சக தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தனியாக நலவாரியம் அமைத்திட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் அச்சக தொழில் முடங்கினால் பாடப்புத்தகங்கள் விலை உயர்வை பள்ளி மாணவர்கள் சந்திக்கும் சூழல் ஏற்படும் எனவும், நோட்டு புத்தகங்கள் செய்தித்தாள் என அனைத்தும் விலை ஏற்றம் அடையும் என்பதால் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.