சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வந்த நபர் உயிரிழப்பு!!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம்

வேதாச்சலத்துக்கும் இந்த மோசடி வழக்குக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமா? என விசாரிப்பதற்காக நேற்று விசாரணைக்காக போலீசார் ஆஜராகக் கூறியிருந்தனர்.

  • Share this:
கடந்த 2008ஆம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியில் போலி ஆவணங்கள் மூலமாக நூற்றுக்கணக்கான கிரெடிட் கார்டுகள் பெற்று அதன் மூலம் ரூ. 75 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்ததாக ஐசிஐசிஐ நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் நந்தகுமார், சண்முகம், ஹரி, மாதவன் ராம் ஆகிய நான்கு நபர்கள் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் அப்போதே கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் சிறைக்குச் சென்று பின் ஜாமினில் வெளி வந்தனர். இந்நிலையில் அந்த வழக்கு தொடர்பான விசாரணையை கடந்த சில நாட்களாக மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடங்கியிருந்தனர். வங்கியிலிருந்து மோசடி செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் வில்லிவாக்கத்தை சேர்ந்த வேதாசலம் (60) என்பவரின் பெயரில் இருந்ததாலும் மேலும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த குற்றவாளி சண்முகத்தின் அக்காவின் கணவர்தான் வேதாச்சலம் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து வேதாச்சலத்துக்கும் இந்த மோசடி வழக்குக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமா? என விசாரிப்பதற்காக நேற்று விசாரணைக்காக போலீசார் ஆஜராகக் கூறியிருந்தனர். அதன் பேரில் நேற்று காலை 11 மணியளவில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த குற்றவாளி சண்முகம், தனது அக்காவான அம்சா மற்றும் அக்காவின் கணவரான வேதாச்சலம் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு - வங்கி மோசடி தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு இவர்களை அழைத்து வந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விசாரணையில் சண்முகம் தனது அக்காவின் கணவரான வேதாச்சலம் என்பவரின் வாக்காளர் அட்டை, வங்கி கணக்குகள், நில பத்திரம் ஆகியவற்றை வைத்து வங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இந்த வழக்குக்கும் வேதாச்சலத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையெனவும் போலீசாருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து மதிய உணவை முடித்து விட்டு வருவதாக கூறிய வேதாச்சலமும் அவரது மனைவி அம்சாவும் மதிய உணவிற்கு பிறகு மீண்டும் அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராகினர். இந்த நிலையில் திடீரென தனக்கு மயக்கம் வருவதாக வேதாச்சலம் கூறியுள்ளார். பின்னர் போலீசார் அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப் படுத்தியுள்ளனர். இந்த நிலையில் திடீரென வேதாச்சலம் கீழே சரிந்து உள்ளார். முதலுதவி அளித்த போலீசார் அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Also read: எஸ்.பி.ஐ. ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்ட நபரை சிசிடிவி காட்சி கொண்டு ஹரியானாவில் பிடித்த தனிப்படை போலீசார்!

அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வேப்பேரி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவருக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் மற்றும் ரத்தக்கொதிப்பு அதிக அளவில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Esakki Raja
First published: