ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

விஷப்பாம்பை வைத்து வித்தை.. கல்லா கட்டும் மூதாட்டி- பரபரப்பு வீடியோ

விஷப்பாம்பை வைத்து வித்தை.. கல்லா கட்டும் மூதாட்டி- பரபரப்பு வீடியோ

பாம்பு வைத்து வித்தைகாட்டிய மூதாட்டி

பாம்பு வைத்து வித்தைகாட்டிய மூதாட்டி

Tambaram: வனத்துறை அதிகாரிகள் சிசிடிவி காட்சிகள் கைப்பற்றி விஷப்பாம்புடன் சென்ற மூதாட்டியை தேடி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தாம்பரம் அருகே நாகப்பாம்பை வைத்து வித்தை காட்டும் மூதாட்டியால் பரபரப்பு சிசிடிவி காட்சி அடிப்படையில் மூதாட்டியை வனத்துறை அதிகாரிகளும்,போலீசாரும் தேடி வருகின்றனர்.

சென்னை தாம்பரம் அடுத்த மப்பேடு பகுதியில்  70 வயது மூதாட்டி ஒருவர் வீடு வீடாக உதவி கேட்டு செல்லும் போது   மகுடியை ஊதி சிறிது நேரத்தில் திடிரென கையில் வைத்திருக்கும் பெட்டி ஒன்றில் இருந்து 6 அடி நீளம் உள்ள கொடிய விஷம் கொண்ட நல்ல பாம்பினை வீட்டின் முன்பு வைத்து வேடிக்கை காட்டுகிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த  குடியிருப்புவாசிகள் விஷ பாம்பினை வீட்டிற்குள் புகுந்து விடுமோ என்ற அச்சத்தில் பணம் மற்றும் பழைய துணிகளை மூதாட்டியிடம் கொடுக்கின்றனர்.

Also Read: சமயபுரம் கோயிலில் பாம்பு கடித்து முதியவர் பலி

இதனைப் பயன்படுத்தி மூதாட்டி தொடர்ந்து குடியிருப்புவாசிகள் முழுவதும் பாம்பை வைத்து பணம் வசூல் செய்து உள்ளார்.

தொடர்ந்து இதனை வீடியோ பதிவு செய்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் விசாரித்த போது அந்த மூதாட்டி விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் தனது மகன் தாம்பரத்தில் உள்ளதால் அவனை காண்பதற்காக ரயில் மூலம் விஷப் பாம்புடன் வருவதாகவும் பாம்பினை வைத்து வித்தை காட்டி பணம் சம்பாதித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

' isDesktop="true" id="702397" youtubeid="PlFsT6mlQJ4" category="chennai-district">

இதையடுத்து குடியிருப்புவாசிகள் பாம்பு எப்படி உங்களுக்கு கிடைத்தது என கேட்டபோது முன்னுக்கு பின் முரனாக பதிலளித்துள்ளார். சிறிது நேரத்தில் அப்பகுதியில் இருந்து சென்றுவிட்டார். கொடிய விஷம் கொண்ட நல்ல பாம்பை வைத்து வீடு வீடாக செல்லும் இந்த மூதாட்டியின் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

Also Read: வில்லங்க சான்று வாங்க வந்த இடத்தில் வில்லங்கம்.. போலி பத்திரப்பதிவை கண்டித்து பாதிக்கப்பட்டவர்கள் தர்ணா

பின்னர் இதுகுறித்து அப்பகுதி மக்கள் சேலையூர் காவல் நிலையத்திற்கும் வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சிசிடிவி காட்சிகள் கைப்பற்றி விஷப்பாம்புடன் சென்ற மூதாட்டியை தேடி வருகின்றனர்.

செய்தியாளர்: சுரேஷ்

First published:

Tags: CCTV, CCTV Footage, Snake, Tambaram