ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னையில் வீட்டின் பூட்டை உடைக்காமல் தங்க நகை கொள்ளை...!

சென்னையில் வீட்டின் பூட்டை உடைக்காமல் தங்க நகை கொள்ளை...!

வீட்டின் பூட்டை உடைக்காமல் தங்க நகை கொள்ளை

வீட்டின் பூட்டை உடைக்காமல் தங்க நகை கொள்ளை

வீட்டின் பூட்டை உடைக்காமல் 7 சவரன் தங்க நகை காணாமல் போனது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  சென்னை குரோம்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைக்காமல் 7 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னை பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை சாஸ்திரி காலனி 2வது தெருவில் வசித்து வருபவர் பெருமாள். இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்கள் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளனர்.

  அப்போது வீட்டிற்க்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 7 சவரன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. உடனே இது குறித்து குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Also read... புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை மாயமானது குறித்த விசாரணை நிலை என்ன? - நீதிமன்றம் கேள்வி!

  வீட்டின் பூட்டை உடைக்காமல் 7 சவரன் தங்க நகை காணாமல் போனது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குரோம்பேட்டை பகுதியில் காவல் துறை தரப்பில் சுமார் 40க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

  ஆனால் போலீசார் சிசிடிவி கேமராவை பராமரிகாததால் சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை இதனால் குற்றவாளிகளை பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இனியாவது குரோம்பேட்டை போலீசார் உடனே சிசிடிவி கேமராகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Gold Theft