ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பிலிப்பைன்ஸில் உயிரிழந்த மருத்துவ மாணவர் உடல் அரசு செலவில் தமிழகம் கொண்டுவரப்பட்டது

பிலிப்பைன்ஸில் உயிரிழந்த மருத்துவ மாணவர் உடல் அரசு செலவில் தமிழகம் கொண்டுவரப்பட்டது

மருத்துவ மாணவரின் உடல்

மருத்துவ மாணவரின் உடல்

இன்று அதிகாலை சஷ்டிமாரின் உடலை பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழக அரசின் நடவடிக்கையால், பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் இராசிங்கபுரம் சார்ந்த மருத்துவக்கல்வி மாணவன் சஷ்டிகுமார் உடல் அரசு செலவில் தமிழகம் கொண்டுவரப்பட்டது.

  தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் இராசிங்கபுரம் நடுத்தெருவில் வசித்து வரும் பாலசேகரன் என்பவரின் மகன்  சஷ்டிகுமார் இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஏ.எம்.ஏ மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டப் படிப்பு படித்து வந்தார்.

  இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள அருவியில் குளிக்கச் சென்ற போது சஷ்டிகுமார் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர உரிய ஏற்பாடுகளைச் செய்திடுமாறு முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம் கோரிக்கை வைத்திருந்தார்.

  இதையடுத்து தமிழக முதல்வர் மத்திய அரசின் வெளியுறவுத்துறை உதவியுடன் தமிழக அரசின் வெளிநாட்டு தமிழன் நல ஆணையம் இணைந்து பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த சஷ்டிகுமாரின் உடலை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

  Read More : ஏப்ரல் 2-வது வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு - 9,494 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு

  இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை சஷ்டிமாரின் உடலை பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து விமான நிலையத்தில் அவரின் பெற்றோர்களிடம் உடலை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

  Must Read : நாக சைத்தன்யாவுடனான பிரிவு அறிவிப்பை நீக்கிய சமந்தா - காரணம் இது தானாம்

  மேலும் அவரது உடலை சொந்த ஊருக்கு அரசு சார்பில் இலவச அமரர் ஊர்தி மூலம் எடுத்து செல்லப்பட்டது.

  செய்தியாளர் : சுரேஷ், சென்னை விமான நிலையம்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Chennai Airport, Medical Students, Philippines