Home /News /tamil-nadu /

தேர் விபத்து... அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தேர் விபத்து... அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பதிற்கு அரசு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கி உள்ளது, இது போதாது. ரூ.25லட்சம் நிவாரணம் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

தஞ்சாவூர் தேர் விபத்து தொடர்பாக சட்டப்பேரவையில்  கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அரசு உரிய முன்னேற்பாடுகளை செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.

தமிழக சட்டப்பேரவையில் தஞ்சை மாவட்டம் களிமேடு கிராமத்தில் ஏற்பட்ட தேர் விபத்து குறித்த கவன ஈர்ப்பில் பேசிய எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  தேர் திருவிழா என்றால் மின்சாரம் நிறுத்தபட வேண்டும் , சாலைகள் முழுமையாக செப்பனிட பட்டிருக்க வேண்டும். ஆனால் இது போன்ற நடைமுறைகள் பின்பற்றபடவில்லை என தெரிகிறது. எனவே இந்த விபத்திற்கு
காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயிரிழந்தவர்கள் குடும்பதிற்கு அரசு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கி உள்ளது, இது போதாது. ரூ.25லட்சம் நிவாரணம் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு வழங்க வேண்டும். அதிமுக சார்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 1 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருவிழா காலங்களில் உரிய பாதுகாப்பு அளிக்காததை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்வதாகவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி , தஞ்சாவூரில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், காயம் அடைந்தவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும்.  தஞ்சாவூர் விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. திருவிழா நேரத்தில் அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம் காவல்துறை இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது தான் 11 உயிரிழப்புக்கு காரணம்.

இதையும் படிங்க: தஞ்சாவூர் தேரில் மின்சாரம் பாய்ந்தது எப்படி..? 94 ஆண்டுகளில் இல்லாத கோர விபத்து பற்றி ஊர் மக்கள் கூறுவது என்ன?

தமிழகத்தில் தற்போதைய அரசாங்கம் சித்திரை திருவிழாவிலும் முழுமையான பாதுகாப்பை வழங்க தவறிவிட்டது. முதல்வர் நேரில் சென்றாலும் யார் போனாலும் இனி உயிர் திரும்பி வருமா ?
இதனால் இனி திருவிழா காலங்களில் எந்த பாதிப்பும் வராது என அரசு உறுதியளிக்க வேண்டும். தமிழகத்தில் திமுக அரசு செயலிழந்து விட்டது. அதிமுக ஆட்சியில் அத்திவரதர் தரிசனத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் வந்த போதும் அதிமுக அரசு முழுமையான பாதுகாப்பு வழங்கியது என தெரிவித்தார்.
Published by:Murugesh M
First published:

Tags: Edappadi palanisamy, TN Assembly

அடுத்த செய்தி