10 ஆண்டுக்கு பிறகு அரியணை ஏறும் திமுக... உற்சாகத்தில் கொண்டாடிய தொண்டர்கள்.. தடுக்க தவறிய போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

10 ஆண்டுக்கு பிறகு அரியணை ஏறும் திமுக... உற்சாகத்தில் கொண்டாடிய தொண்டர்கள்.. தடுக்க தவறிய போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

அண்ணா அறிவாலயம்

கொரோனா தொற்று காலத்தில் முன்னெச்சரிக்கை பணிகளை எடுக்கவில்லை என தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 • Share this:
  தமிழக சட்டமன்றத் தேர்தலில் கடந்த மாதம் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் இருபெரும் திராவிட கட்சிகளான அதிமுக - பாஜக - பாமக ஒரு கூட்டணியாகவும், திமுக - காங்கிரஸ் - விசிக - கம்யூனிஸ்ட்டுகள் மற்றொரு கூட்டணியாகவும் களம் கண்டன. தவிர அமமுக, மநீம, நாதக ஆகியவைகளும் தேர்தலில் போட்டியிட்டன.
  இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

  இதில் இறுதி முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இன்று இரவு 12 மணியாகும் எனத் தெரிகிறது. அதே நேரத்தில் தற்போது வரை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 147 தொகுதிகளிலும், அதிமுக 97 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. அதனால் உற்சாகம் அடைந்த திமுக தொண்டர்கள் தேனாம்பேட்டையிலுள்ள கட்சித் தலைமையகமான அண்ணா அறிவாலத்தில் கூடி, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

  ஆனால் இன்று கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் கொண்டாட்டங்கள் இருக்கக் கூடாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுருந்தது. அதை மீறி வெற்றி கொண்டாட்டத்தில் திமுக வினர் ஈடுப்பட்டனர்.

  இது தொடர்பாக தகவல் அறிந்த போலிசார் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களை எச்சரித்தனர்.  ஒலிபெருக்கி மூலம் கொண்டாட்டத்தில் ஈடுபடவேண்டாம் என திமுக தலைமை நிர்வாகிகள் கேட்டுகொண்டனர்.

  இதனையடுத்து அண்ணா அறிவாலயத்திற்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு கட்சி அலுவலகம் வரும் தொண்டர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்

  மேலும் இதனை தடுக்க தவறியதாகவும், பணியின் போது அலட்சியமாக செயல்பட்டதாகவும் என கூறி,  தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளி பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளார்.

  மேலும் படிக்க...  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி: வைரமுத்து  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: