• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • டீ குடிச்சா காசு கேட்பியா.. நான் உள்ளூர்காரன் - டீ கடை உரிமையாளரை தாக்கி கடையை நொறுக்கிய இளைஞர்

டீ குடிச்சா காசு கேட்பியா.. நான் உள்ளூர்காரன் - டீ கடை உரிமையாளரை தாக்கி கடையை நொறுக்கிய இளைஞர்

டீக்கடையில் தகராறு செய்த வினோத்

டீக்கடையில் தகராறு செய்த வினோத்

டீ குடித்து விட்டு பணம் தரமால் ஏமாற்றி வந்த விக்னேஷ் காசு கேட்டதற்காக கடை உரிமையாளரை தாக்கியுள்ளார்.

  • Share this:
    நாவலூரில் குடித்த டீ க்கு பணம் கேட்கிறாய்யா என்று கடையின் உரிமையாளர் மற்றும் கடையை அடித்து உடைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

    பழைய மகாபலிபுரம் சாலை நாவலூர் அருகே கேரளா மாநிலத்தை சேர்ந்த ரியாஸ் என்பவர் கடந்த 3 வருடங்களாக ஜுஸ் மற்றும் டீ கடை நடத்தி வருகிறார்.இதே கட்டிடத்தில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு விக்னேஷ் என்பவர் சிறிய பெட்டிக்கடை ஒன்றை வைத்துள்ளார்.கடந்த 1 மாதமாக ரியாஸ் கடையில் டீ குடித்து விட்டு பணம் தரமால் ஏமாற்றி வந்துள்ளார்.

    முதலில் அக்கவுண்டில் எழுதிவைத்திக்கொள்ளும்படி கூறி வந்த விக்னேஷ் நாளடைவில் மிரட்டல் விடும் அளவுக்கு பேசி வந்துள்ளார். இதுவரை குடித்த டீ-க்கு காசு கொடுக்கும்படி ரியாஸ் கேட்டதற்கு, நான் இந்த ஊரைச் சேர்ந்தவன் நான் காசு எல்லாம் தரமாட்டேன் யாரிடம் வேண்டும் என்றாலும் சொல்லிக்கோ என்று மிரட்டியுள்ளார்.
    டீ குடித்து விட்டு பணம் தரமால் ஏமாற்றி வந்த விக்னேஷ் குறித்து டீ கடையின் உரிமையாளர் ரியாஸ் கட்டிடத்தின் உரிமையாளரிடம் கூறியுள்ளார்.

    Also Read:  வேலை போனால் சாவதைத் தவிர வேறு வழியில்லை - தற்கொலை செய்துக்கொண்ட நதியாவின் ஆடியோ பதிவு

    உடனடியாக கட்டிட உரிமையாளர் விக்னேஷை அழைத்து கேட்டுள்ளார்.இதனால் விக்னேஷ் என்னைப்பற்றி கட்டிட உரிமையாளரிடம் புகார் தெரிவிக்கிறாயா என்று நேற்று இரவு ரியாஸ் நடத்தி வரும் டீ கடைக்கு சென்று கடையில் இருந்த அனைத்து பொருட்களையும் எடுத்து உடைத்துள்ளார்.
    டீ கடையின் உரிமையாளர் ரியாசையும் தாக்கியுள்ளார்.
    ரியாஸ் கொடுத்த புகாரின் பேரில் கேளம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விக்னேஷ் மீது ஏற்கனவே 2 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: ப.வினோத்கண்ணன்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: