டீக்கடையில் மது அருந்திய வாலிபர்கள்.. தட்டிக்கேட்ட ஊழியர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்

டீக்கடை தகராறு

கடை ஊழியர்களை மது அருந்தியவர்கள் கண்மூடிதனமாக தாக்கியதால் அந்தப்பகுதியே போர்களம் போல் காட்சியளித்தது . 

 • Share this:
  டீக்கடையில் அமர்ந்து மது அருந்திய நபர்களை தட்டிக் கேட்டதால் ஊழியர்களை கண்மூடிதனமாக தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் வள்ளுவர் நகரில்  டீக்கடை உள்ளது. நேற்றிரவு டீ கடைக்கு சென்ற மூன்று நபர்கள் பஜ்ஜி மற்றும் ஜூஸ் வாங்கியுள்ளனர். ஜூஸோடு சேர்த்து மது கலந்து கடையினுள் அமர்ந்து மூவரும் மது அருந்தியதால் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் இங்கு அமர்ந்து மது அருந்த வேண்டாம் என கூறியுள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கடை ஊழியர்களை மிரட்டிவிட்டு மூவரும் அங்கிருந்து பணம் கொடுக்காமல் செல்ல முயன்றனர்.

  Also Read:  3 கோடி பேரம்.. இன்னோவா காருடன் கடத்தப்பட்ட ரைஸ்மில் அதிபர் மகன் - கடத்தல்காரர்கள் போலீசில் சிக்கிய பின்னணி

  பணம் கொடுக்கும்படி அவர்களிடம் கேட்டு அவர்களின் அருகில் சென்றபோது வாகனத்தில் தப்பி செல்ல முயன்றதால் இருசக்கர வாகன சாவியை கடை ஊழியர்கள் எடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த மூன்று நபர்களும் கடை ஊழியர்களை அடித்து தகராறில் ஈடுபட்டனர். மது அருந்திய நபர்கள் கடை ஊழியர்களை தாக்கியபோது கடையில் இருந்த நாற்காலிகளை எடுத்து ஊழியர்கள் திருப்பி தாக்க முயன்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கடை ஊழியர்களை மது அருந்தியவர்கள் கண்மூடிதனமாக தாக்கியதால் அந்தப்பகுதியே போர்களம் போல் காட்சியளித்தது . கடை ஊழியர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

  Also Read: பியூட்டி பார்லரில் வேலைக்கு வந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு.. கண்டித்த மனைவியை கைவிட்ட காதல் கணவன் - நிற்கதியாய் நிற்கும் பெண்

  டீ கடை ஊழியர்களை தாக்கிய மூவரும் தப்பியோடிய நிலையில் பாதிக்கப்பட்ட வட மாநில இளைஞர்கள் கொடுத்த புகாரின் பேரில் பெரும்பாக்கம் போலீசார் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த பொன்மார் மலைத்தெருவை சேர்ந்த நாகூர் மீரான்(24), அஜித்குமார்(18), மற்றும் ஒரு சிறார் உட்பட மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

  டீ கடையில் குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டு ஊழியர்களை கண்மூடிதனமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர்: ப.வினோத்கண்ணன்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: