Home /News /tamil-nadu /

TASMAC | மது போதையில் ஹோட்டல் மேனேஜரை அடித்து உதைத்த மது பிரியர்கள்... சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுப்பதில் தகராறு

TASMAC | மது போதையில் ஹோட்டல் மேனேஜரை அடித்து உதைத்த மது பிரியர்கள்... சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுப்பதில் தகராறு

 மதுபோதையில் தகராறு செய்த மது பிரியர்கள்

மதுபோதையில் தகராறு செய்த மது பிரியர்கள்

TASMAC | மண்ணூர் பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு குடிபோதையில் சென்ற நபர்கள் உணவு  சாப்பிட்டு விட்டு தொடர்ந்து பணம் கொடுக்காமல் மேனேஜரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து 2 பேரையும் போலீசார் அம்பத்தூர் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்கவும் ...
    அம்பத்தூரில் சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக காத்திருந்த நபர்கள் பழி வாங்கும் நோக்கில் ஹோட்டல் மேலாளரை கருங்கற்களை கொண்டு தாக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அம்பத்தூர் அருகே மண்ணூர்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் மகேஷ் கண்ணன் (27). இவர் அதே பகுதியில் உள்ள பிரபல ஓட்டலில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை இரவு ஹோட்டலில் பணிபுரிந்து விட்டு இரவு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் சென்ற  நபர் ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது மகேஷ் கண்ணன் விழுந்த நபரை தூக்கி விட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனைக் கண்ட மது போதையில் இருந்த இரண்டு நபர்கள் சண்டை இழுத்து ஹோட்டல் மேனேஜரை ஆபாசமாக பேசி அடித்து உதைக்கின்றனர்.

    பின்னர் மேனேஜரை கீழே தள்ளி தலை முடியை பிடித்துக்கொண்டு அருகில் இருந்த கருங்கல்லை எடுத்து பலமுறை முகத்தில் சரமாரியாக தாக்குகின்றனர்.அதிலும் முகத்தில் தாக்கும் போது அவர் நிலைதடுமாறி கீழே விழுகிறார். இருந்தபோதிலும் அந்த இரண்டு நபர்களும் விடாமல் அவரை கல்லால் முகத்தில் தாக்குகின்றனர்.

    படுகாயமடைந்த அவர் வலியால் ஒரு கட்டத்தில் என்னை விட்டுவிடுமாறு கைக்கூப்பி கேட்கிறார். அவர்கள் விடாமல் தாக்குவதால் அங்கிருந்து தப்பி ரத்தம் சொட்ட சொட்ட சாலையில் தப்பி ஓடுகிறார். அப்போதும் அந்த நபர்கள் விடாமல் ஓட ஓட விரட்டி கல்லால் பலமுறை தாக்குகின்றனர். இந்த சம்பவத்தின் காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.



    இந்த காட்சிகளின் அடிப்படையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் மகேஷ் கண்ணன் புகார் அளித்தார். ஆய்வாளர் மல்லிகா தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  இரண்டு நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த மண்ணூர்பேட்டை பகுதியை சேர்ந்த தினேஷ்,மணிகண்டன் ஆகிய இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.



    அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் மண்ணூர் பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு குடிபோதையில் இருவரும் சென்று உணவு  சாப்பிட்டு விட்டு தொடர்ந்து பணம் கொடுக்காமல் மேனேஜரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட மோதல் காரணமாக மேனேஜரை தாக்கியதாக குற்றவாளிகள் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து 2 பேரையும் போலீசார் அம்பத்தூர் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Chennai, Crime News

    அடுத்த செய்தி