முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஓசி சரக்கு, சைடிஷ் கேட்டு இளைஞர் தகராறு... அடித்து கொன்ற டாஸ்மாக் பார் ஊழியர்கள்..

ஓசி சரக்கு, சைடிஷ் கேட்டு இளைஞர் தகராறு... அடித்து கொன்ற டாஸ்மாக் பார் ஊழியர்கள்..

டாஸ்மாக் மதுப்பான பார் டெண்டர் எதிர்ப்பு வழக்குகள் தள்ளுபடி

டாஸ்மாக் மதுப்பான பார் டெண்டர் எதிர்ப்பு வழக்குகள் தள்ளுபடி

போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் இரண்டு நபர்கள் கோகுலை கட்டையால் அடிப்பது தெரியவந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னையில் டாஸ்மாக் பாரில் இலவசமாக மது மற்றும் சைடிஸ் கேட்டு பிரச்சினையில் ஈடுபட்ட நபர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இதுதொடர்பாக டாஸ்மாக் ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் நேற்று மாலை ஒயின்ஷாப் பாரில் நடந்த சண்டையில் அதே பகுதியை சேர்ந்த கோகுல்(25 வயது) என்ற நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து கோகுலின் தந்தையான சென்னை மாநகராட்சி துப்புரவு ஊழியர் கண்ணன் என்பவர் குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சம்பவ இடம் விரைந்து வந்த குமரன் நகர் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் இரண்டு நபர்கள் கோகுலை கட்டையால் அடிப்பது தெரியவந்தது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்து கொலை செய்த பார் ஊழியர்கள் இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.

இதையும் படிங்க - காதலர் தினத்திற்கு கிப்ட் வாங்குவது போல் நடித்து பேன்ஸி கடையில் புகுந்து நகையை பறித்த பெண்.. பரபர வீடியோ!

இந்த நிலையில் கோகுலை கொலை செய்த பார் ஊழியர்களான ராமநாதபுரத்தை சேர்ந்த செபாஸ்டியன் மற்றும் சிவகங்கையை சேர்ந்த கோபி ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க - தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 3 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்தது... ஒரே நாளில் 11 ஆயிரம்பேர் டிஸ்சார்ஜ்

விசாரணையில் கோகுல் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் டாஸ்மாக் பாருக்கு வெளியே வந்து படுத்து கொண்டதாகவும் நேற்று காலையில் இருந்தே ஓசியில் மது தருமாறு ஒயின்ஷாப் ஊழியர்களிடம் பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும், நேற்று மதியம் ஒயின் ஷாப் அருகில் உள்ள பாரில் தனக்கு சைடிஸ் தர வேண்டும் என கேட்டு பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் பார் ஊழியர்கள் மதுபோதை ஆசாமியை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க - தமிழ்நாட்டில் சினிமா தியேட்டர்கள், உணவகங்கள், சுற்றுலா தலங்களில் 100% அனுமதி?

இதனால் கோபம் கொண்ட கோகுல் ஊழியர்களை தாக்க அருகில் இருந்த கற்களை எடுத்து தாக்க வந்ததாகவும் தங்களின் தற்காப்புக்காக அருகிலிருந்த கட்டையால் கோகுலை அடித்ததாகவும், கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் தாங்கள் அவரை தாக்கவில்லை எனவும் கைதுசெய்யப்பட்ட செபாஸ்டியன் மற்றும் கோபி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட செபாஸ்டியன் மற்றும் கோபி ஆகிய இருவரை குமரன் நகர் போலீசார் சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Crime News, Murder, Tasmac