• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை வெள்ளத்தில் தவித்த 9 மாத கர்ப்பிணியை பத்திரமாக மீட்ட போலீஸார்

சென்னை வெள்ளத்தில் தவித்த 9 மாத கர்ப்பிணியை பத்திரமாக மீட்ட போலீஸார்

கர்ப்பிணி பெண்

கர்ப்பிணி பெண்

வேளச்சேரி பகுதியில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்த 50-க்கும் மேற்பட்ட நபர்களை போலீஸார் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைத்தனர்.

  • Share this:
    சென்னை வேளச்சேரி பகுதியில் மழை வெள்ளத்தால் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்த கர்ப்பிணி பெண்ணை போலீஸார் பத்திரமாக படகு மூலம் மீட்டனர்.

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட  பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வரும் கனமழையின் காரணமாக சாலையில் மழைநீர் வெள்ளம்போல் ஓடுகிறது. சென்னையில் குடியிருப்பு பகுதிகள் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வெளியேற முடியாத சூழல் உள்ளது. வேளச்சேரி பகுதியில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    வேளச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  ஏ.ஜி.எஸ். காலனி, சொக்கலிங்கம் நகர் பகுதியில் 3 அடிக்கும் மேல் மழைநீர் வீட்டிற்குள்ளும், வீட்டை சுற்றியும் சூழ்ந்துள்ளது. அந்தப்பகுதியில் உள்ள வீட்டின் முதல் தளத்தில் வசித்து வந்த 9 மாத கர்ப்பிணி பெண் ஜெயந்தியை (வயது 28) போலீஸார் நேற்று மாலை படகு மூலம் மீட்டு அவரது உறவினர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். மேலும் அப்பகுதியில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்த 50-க்கும் மேற்பட்ட நபர்களை  பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைத்தனர்.

     



    சென்னையில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் மழை விபத்துகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க சென்னை பெருநகர் காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் 13 காவலர் பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர்கள் தலைமையில் ஆயுதப்படை காவலர்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் நீச்சல் மற்றும் வெள்ள நிவாரண பணிகளில் அனுபவம் உள்ள 10 காவலர்கள் உள்ளனர். இந்த குழுவினர்  சென்னையில் வெள்ளம் அதிகம் சூழ்ந்துள்ள இடங்களுக்கு சென்று மழைநீர் அகற்றியும், வெள்ளத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்பது போன்ற இதர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: