Home /News /tamil-nadu /

தமிழக காவல்துறையில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா...

தமிழக காவல்துறையில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நேற்று ஒரேநாளில் மட்டும் தமிழக காவல்துறையில் 100 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில், 2 பேர் ஐ.பி.எஸ். அதிகாரிகள்.

    கொரோனா பரவலில் முக்கிய முன்கள பணியாளர்களாக செயல்படுபவர்கள் காவல்துறையினர். கொரோனா ஒவ்வொரு அலையின் போதும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு பொதுமக்களிடம் கொரோனா பரவல் ஏற்படாமல் இருக்க களத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் காவல் துறையினர் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதன் அடிப்படையில் கடந்த 2 அலைகளில் 8030 காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 143 பேர் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மூன்றாவது அலையிலும் காவல்துறையில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் காவல்துறையை சேர்ந்தவர்கள் 346 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க : சைக்கிளில் பயணம் செய்து ஊரடங்கை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு

    கடந்த டிசம்பர் மாதம் முதல் இன்றுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றினால் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, நேற்று ஒரேநாளில் மட்டும் தமிழக காவல்துறையில் 100 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில், 2 பேர் ஐ.பி.எஸ். அதிகாரிகள்.

    சென்னையில் மட்டும் கூடுதல் ஆணையர் உட்பட 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு தெரிவித்தபடி நிலையான வழி காட்டு நெறிமுறைகளை பின்பற்றி காவல் நிலையங்கள் செயல்பட்டு வருவதாகவும், காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் உடனடியாக தகவல் அளிக்க தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க : பாறை சரிந்து படகில் சென்ற சுற்றுலா பயணிகள் மீது விழுந்த கோர சம்பவம் - 10 பேர் பலி

    கொரோனா பெரிதும் பாதிக்கப்பட்ட காவலர்கள் வீடுகளுக்கு ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டு , மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வசதி செய்து தரப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பெரிதும் பாதிக்கபடாதவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கொரோனா பாதிக்காமல் இருப்பதற்கு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் துறையினரும் இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் இரண்டு தவணை தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு ஒன்பது மாத காலம் ஆகிய காவலர்களுக்கு உடனடியாக பூஸ்டர் தடுப்பு ஊசிகள் இன்று முதல் போடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது

    இதையும் படிங்க : 500 ரூபாய் ஃபைன் இங்க கட்டுனா 300 தான் - ஊரடங்கில் வசூல் வேட்டை நடத்திய போலி போலீஸ்
    Published by:Musthak
    First published:

    Tags: Tamilnadu police

    அடுத்த செய்தி