• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலைகள் வைக்க தமிழக அரசு அனுமதி மறுப்பு!

விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலைகள் வைக்க தமிழக அரசு அனுமதி மறுப்பு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில்  சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில்  விழா  கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

  • Share this:
    கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்த தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. அதேவேளையில், வீடுகளில் வைத்து வழிபடும் சிலைகளை  தனி நபர்கள் கடற்கரைக்கு சென்று கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    நாடு முழுவது கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து பதிவாகி வந்தது. இன்று 20 ஆயிரத்துக்கும் குறைவாக பதிவாகியுள்ளது. ஓணம், பக்ரீத் பண்டிகைகளை முன்னிட்டு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதே கேரளாவில் தொற்று அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.

    இதேபோல், வரும் பண்டிகை காலங்களில் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றும்படியும் மத்திய அரசும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பண்டிகை காலத்தை முன்னிட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு தீவிரபடுத்தியுள்ளது.

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் செப்டம்பர் 15ம் தேதிவரை  கொண்டாடப்படவுள்ள சமய விழாக்களின்  கொண்டாட்டத்திற்கு  கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  சமய  விழாக்களை முன்னிட்டு  மதசார்பான  ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த  தற்போது தடை உள்ளது. பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட  விளையாட்டுக்களை  நடத்துவதற்கும் தடை விதிக்கப்படுவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?


    மேலும், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில்  சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில்  விழா  கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் அதுபோன்று சிலைகளை,  ஊர்வலமாக  எடுத்துச்  செல்வதற்கும் நீர்நிலைகளில்  சிலைகளை கரைப்பதற்கும்  அனுமதி இல்லாத நிலையில்  இச்சமய விழாக்களை பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: இனி ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல அனுமதி இல்லை: தமிழக அரசு


    தனி நபர்களாக சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, அதேவேளையில், சென்னையில் சாந்தோம் முதல் நேப்பியர் பாலம்  வரையிலான வழித்தடத்தில்  இச்செயல்பாட்டிற்கு முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. இந்த அனுமதி தனி நபர்களுக்கு மட்டும்தான் என்றும் அமைப்புகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், தனிநபர்கள்‌, தங்களது இல்லங்களில்‌ வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை ஆலயங்களின்‌ வெளிப்புறத்திலோ / சுற்றுப்புறத்திலோ வைத்துச்‌ செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இச்சிலைகளை பின்னர்‌ முறையாக அகற்றுவதற்கு இந்து சமய அறநிலையத்துறையால்‌ தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌.

    படிக்க: சாலையோர மக்களுக்கு உணவளிக்கும் காவல் ஆய்வாளர்: ஊடங்கு முடிந்தும் தொடரும் மனிதநேயம்!


    தற்போது நடைமுறையில்‌ உள்ள சமூக இடைவெளியினைக்‌ கடைப்பிடித்தல்‌ மற்றும்‌ இதர கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மேற்குறிப்பிட்டுள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இந்த வழிமுறைகளை மீறுபவர்கள் மீது  சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: