சட்டப்பேரவை கூட்டம் நிறைவு: அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

ஸ்டாலின் மரியாதை

மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள பூங்காவில் அமர்ந்து அமைச்சர்களுடன் கலந்துரையாடினார்.

  • Share this:
சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில் அண்ணா, கருணாநிதி ஆகியோர் நினைவிடத்தில் அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

16- வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி  கலைவாணர் அரங்கில் தொடங்கியது. முதல் நாளில் ஆளுநர் பன்வாரிலால் உரையாற்றினார். அவரது உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த விவரம் இடம் பெற்றிருந்தது. இதை தொடர்ந்து அடுத்த இரு தினங்கள், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது.

இதில், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அமைச்சர்களும் முதலமைச்சரும் பதிலளித்து பேசினர்.  நீட், மின் வெட்டு உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக காரசார விவாதங்கள் நடைபெற்றன. இறுதி நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினர். இதை தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நிறைவுப் பெற்றதையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். துரைமுருகன்,பொன்முடி, கே.என்.நேரு உள்ளிட்ட மூத்த  அமைச்சர்கள் உடன் இருந்தனர்.  இதைத் தொடர்ந்து அங்குள்ள பூங்காவில் அமர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்களுடன் கலந்துரையாடினார்.
Published by:Murugesh M
First published: