Home /News /tamil-nadu /

சென்னையில் மழை பாதிப்பு பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னையில் மழை பாதிப்பு பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

மழை பாதித்த பகுதிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

மழை பாதித்த பகுதிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

மழை வெள்ளத்தை வெளியேற்ற துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, வேப்பேரி, பேரக்ஸ் ரோடு பகுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


    கனமழையின் காரணமாக நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, நங்கநல்லூர், ஈக்காடுதாங்கல், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.


    முதலமைச்சர் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான உதவிகள் செய்துதரப்படும் என்றார்.


    மழை வெள்ளத்தை வெளியேற்ற துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



    முதலமைச்சருடன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் உடனிருந்தனர்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Chennai, Chennai rains, DMK, MKStalin, Weather

    அடுத்த செய்தி