சென்னையின் 45-வது புத்தகக் கண்காட்சியை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 45 ஆவது புத்தக காட்சியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தொடங்கி வைக்கிறார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான ‘பபாசி’ சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் மாபெரும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது. வரும் மார்ச் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ள புத்தக காட்சியில், 800 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
கொரோனா முன்னெச்சரிக்கையாக 65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் கர்ப்பிணிகள் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அடையாள அட்டையுடன் வரும் மாணவர்களுக்கு, இலவச நுழைவுச் சீட்டு வழங்கப்படும். மற்றவர்களுக்கு, 10 ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. கடந்த மாதம் தொடங்கப்பட இருந்த புத்தக காட்சி, கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தொடங்குகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Book reading, Book release, Chennai, Chennai book fair, MK Stalin