துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் நாளில் நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 18-ம் தேதி பொது நிதிநிலை அறிக்கையும், அதற்கு மறுநாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. அதன் மீதான விவாதங்களுக்கு அத்துறை அமைச்சர்கள் பதில் அளித்ததைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர் 24-ம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில், துறை வாரியான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் மீண்டும் இன்று தொடங்கி அடுத்த மாதம் 10-ம் தேதி வரை 22 நாட்கள் நடைபெற உள்ளது.
Also Read: அதிமுகவை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது.. அதிமுக ஆட்சி மீண்டும் மலரும் - கே.டி.ராஜேந்திர பாலாஜி
முதல் நாளான இன்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.இதில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் பேச உள்ளனர்.இறுதியில் அமைச்சர் துரைமுருகன் பதிலுரையாற்ற உள்ளார். இதேபோல் ஒவ்வொரு நாளும் துறை ரீதியாக மானியக் கோரிக்கைகள் மீதும் விவாதம் நடைபெற உள்ளது. தினமும் கேள்வி, பதில் நேரம் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இருந்தால் 110 விதியின் கீழ் முதலமைச்சர் வெளியிடும் அறிவிப்புகள் ஆகியவை நேரலை ஒளிபரப்பு செய்யப்படும்.
Also Read: தமிழ்நாட்டுக்கான புதிய கல்விக் கொள்கை- வல்லுநர்கள் குழுவை அமைத்த தமிழக அரசு
சொத்து வரி உயர்வு, நீட் தேர்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப அ.தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன மேலும், சொத்து வரி உயர்வைக் கண்டித்து இன்று நடைபெறும் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்ய அதிமுக திட்டமிட்டுள்ளது. எனவே, தினமும் சட்டப்பேரவையில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, BJP, Chennai, DMK, Edappadi palanisamy, MK Stalin, O Panneerselvam, Tamilnadu, TN Assembly