Tamil Nadu Full Lockdown : கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்த மக்கள்

Youtube Video

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளநிலையில் சென்னை கோயம்பேடு பேருந்துநிலையத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவு நேற்று பிறக்கப்பட்ட நிலையில் புலம் பெயர்ந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்கு தொடங்கியுள்ளனர். குறிப்பாக, கோயம்புத்தூரில் வேலை செய்து வரும் வட இந்தியத் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்காக நேற்று இரவே கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் குவிந்தனர்.

    அதேபோல, சென்னையிலும் தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வேலை செய்துவருகின்றனர். அவர்களும் சொந்த ஊர் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவியத் தொடங்கியுள்ளனர்.

    நாளை முதல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில் இன்று இரவோடு பேருந்து சேவை நிறுத்தப்படுகிறது. ஊரடங்கையொட்டி மக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக தமிழகம் முழுவதும் 17,195 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னையில் இருந்து மட்டும் 9,696 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நேற்று ஒருநாளில் மட்டும் தலைநகர் சென்னையிலிருந்து 3 லட்சம் பேர் சொந்த ஊர் திரும்பியிருக்கிறார்கள். இன்று மேலும் 3 லட்சம் பேர் சொந்த ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தொற்று பரவலைக் கட்டுப்படுத்த 50% பயணிகளுடன் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என அறிவித்துள்ள நிலையில் சில பேருந்துகள் 100% பயணிகளுடன் இயக்கப்பட்டன. இன்று இரவோடு பேருந்து சேவை நிறுத்தப்படும் என்பதால் நேற்றில் இருந்தே கோயம்பேடு பேருந்து நிலையம் கூட்டமாக காணப்படுகிறது. மக்கள் கூட்டம் அதிகரிப்பால் கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: