திருநம்பி, திருநங்கைகளுக்காக தமிழகத்தின் முதல் கட்டணமில்லா விடுதி! குவியும் பாராட்டு

திருநங்கைகள்

இதுபோன்ற விடுதிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதிலிருந்தும், பிச்சை எடுப்பதிலிருந்தும் திசைதிருப்ப மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உதவுவதாக குறிப்பிட்டுள்ளார்.

  • Share this:
குடும்பத்தினரால் கைவிடப்படும் திருநங்கைகளுக்கும் திருநம்பிகளுக்கும் மறுவாழ்வு அளிக்கும் விதமாக தமிழகத்தில் முதன்முறையாக இலவச தங்கும் விடுதி அமைக்கப்பட்டிருப்பது பல தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

பொதுவாக, மூன்றாம் பாலின சமூகத்தைப் பொறுத்தவரை, இடையூறுகளற்ற தங்குமிடமும் ஒருவரிடம் இருந்து பெறும் ஊக்கமும் அவர்கள் வாழ்வில் பெறும் பங்காற்றும். நீண்டகாலமாக இவை இல்லாமல் மூன்றாம் பாலினத்தவர்களில் பலர் பெரும் துயரங்களுக்கு ஆளாவதை பார்த்திருப்போம். அது நிதர்சனமான உண்மையும் கூட. இறுதியில், தாங்களே தங்களுக்கு உதவ முன்வந்தால் மட்டுமே அவர்கள் நிம்மதி அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அனால், இப்போது ​​அவர்களுக்கு உதவ சிறந்த வழிகள் இருப்பதாக பலர் உணர்ந்துள்ளனர். அந்த வகையில், சென்னையின் கொளத்தூர் பகுதியில் மூன்றாம் பாலினத்தவருக்கு என இலவசமாக தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது. கைவிடப்படும் மூன்றாம் பாலினத்தவருக்கு இடமளித்து இலவசமாகவுன் உணவளிக்கிறது. இந்த உணவு மற்றும் தங்குமிடம் வழங்குகிறது.

இதுகுறித்து மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகள் சங்கத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனர் ஜீவா கூறுகையில், இத்தகைய தங்குமிடம் 2019ஆம் ஆண்டு திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், குடும்ப உறுப்பினர்களால் கைவிடப்பட்ட திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் என இருவருக்கும் சேவை செய்யும் என்றும் கூறியுள்ளார். அத்துடன் இவை பாலியல் தொழிலில்
ஈடுபடுவதிலிருந்தும், பிச்சை எடுப்பதிலிருந்தும் திசைதிருப்ப அவர்களுக்கு உதவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திருநங்கைகள் பற்றிய விழிப்புணர்வு பரவலாக இருந்தாலும், திருநம்பிகளைப் பற்றி நிறைய பேருக்குத் தெரிவதில்லை. வீட்டிலிருந்து வேலை தேட வழி இல்லாமல்தான் பலர் சென்னைக்கு வருகிறார்கள் என்று திருநம்பியான கவுதம் 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' உடன் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும், அவர் மூன்றாம் பாலினத்தவரின் அடையாள அட்டையைப் பெறுவதற்காக தென்காசியில் இருந்து சென்னைக்கு வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். இதன் மூலம் அரசின் கொரோனா கால உதவித்தொகையான மாதம் ரூ.2,000 பெற முடியும் என்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இருப்பினும், இந்த இடம் மூன்றாம் பாலினத்தவரின் உணவு மற்றும் தங்குமிடம் வழங்குவதோடு நின்றுவிடவில்லை. அவர்களை மேம்படுத்துவதற்காக, அழகு சார்ந்த படிப்புகள், தையல் பயிற்சி, ஜூட் பைகள் தயாரிக்கும் பயிற்சிகள் மற்றும் கைவினைப்பொருட்கள் போன்ற பல பயிற்சி வகுப்புகளில் சிறந்து விளங்க இந்த அமைப்பு மேலும் முயற்சிகளை எடுக்கிறது. பயிற்சி பெற்றவுடன், அவர்கள் தங்கள் திறமைகளைப் பயன்படுத்தக்கூடிய அதைச் சார்ந்த வேலைகளில் நிறுவப்படுகிறார்கள். "எல்லாம் இங்கே கிடைக்கப்பெற்றுள்ளது. எங்களை எங்கள் குடும்பமே கைவிட்ட போதிலும் இந்த இடம் எங்களுக்கு ஒரு குடும்பம் போல மாறியுள்ளது", என தங்குமிடத்தில் உள்ள திருநங்கைகள் கூறினர்.

இதற்கிடையில், இந்த தங்குமிடம் சந்தேகத்திற்கு இடமின்றி திருநங்கைகளுக்கு ஒரு பெரிய மறு தொடக்கத்தை வழங்கும் ஒரு வீடாக அமைந்துள்ளது. மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகள் சங்கத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனர் ஜீவா இதுபோன்று மேலும் பல மையங்களை மூன்றாம் பாலினத்தவர்களின் நலனுக்காக தமிழகம் முழுவதும் உருவாக்க வேண்டும் என விரும்புவதாக கூறியுள்ளார்.
Published by:Archana R
First published: