Tamil Nadu Election Result 2021: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை!

Tamil Nadu Election Result 2021: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை!

உதயநிதி ஸ்டாலின்

திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளார்.

  • Share this:
    திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளார்.

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் கடந்த மாதம் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் இருபெரும் திராவிட கட்சிகளான அதிமுக - பாஜக - பாமக ஒரு கூட்டணியாகவும், திமுக - காங்கிரஸ் - விசிக - கம்யூனிஸ்ட்டுகள் மற்றொரு கூட்டணியாகவும் களம் கண்டன. தவிர அமமுக, மநீம, நாதக ஆகியவைகளும் தேர்தலில் போட்டியிட்டன.

    இதையடுத்து, தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தற்போது வரை திமுக கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. இருப்பினும் அதிமுக-வும் திமுக-வை நெருங்கி கடும் போட்டியைக் கொடுத்து வருகிறது.

    இந்நிலையில் திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக வேட்பாளர் கஸ்ஸாலி பின்னடைவை சந்தித்துள்ளார்.

    இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வரும் குயின்மேரி கல்லூரிக்கு வருகை புரிந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: