All-Party Meeting | முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்... ஆக்சிஜன், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து பேசப்படும் என தகவல்
All-Party Meeting | முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்... ஆக்சிஜன், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து பேசப்படும் என தகவல்
முதல்வர் பழனிசாமி
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஆக்சிஜன் பற்றாக்குறை, ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து பேசப்படும் என தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இந்த சூழலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்து கட்சிக்கூட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தலைமை செயலகத்தில் காலை 9.15 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றியும் ஆலோசனை நடைபெறும் என கூறப்படுகிறது.
மேலும் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய அனுமதிக்குமாறு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இதுகுறித்து பொதுமக்களிடம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினார். இதுதொடர்பான அறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்பிவைத்துள்ளார். இந்த சூழலில், இன்று நடைபெறும் கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து பேசப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் எம்.பி.கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.