கூவம், அடையாறு ஆறுகளில் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

மாதிரிப் படம்

கூவம் ஆற்றை சுத்தப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

  • Share this:
கூவம், அடையாறு ஆறு மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்ற ஆலோசனையில் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். சிங்கார சென்னை 2.0 திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், நீர்வழித்தடங்களான கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாகவும், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சார் துறைகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் கூவம் மற்றும் அடையாறு ஆறு மறுசீரமைப்பு பணிகள், வடிகால் சீரமைப்பு பணிகள் தொடர்பாகவும், இனி வரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறிப்பாக, தூர்வாருதல், திடக்கழிவு அகற்றுதல், பாதுகாப்பு வேலி அமைத்தல், கழிவு நீரை இடைமறித்தல் மற்றும் மாற்று வழிகளை அமைத்தலுக்கான மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கடந்த ஆட்சியில் கூவம் ஆற்றை சீர்படுத்துவது தொடர்பாக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்ட நிலையில் எதுவும் செயல்பாட்டிற்கு வராத சூழலில் தற்போது தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் அதிகாரிகள் இதுதொடர்பாக ஆலோசித்து இருப்பது நம்பிக்கை தரக்கடியதாக பார்க்கப்படுகிறது.
Published by:Karthick S
First published: