கர்நாடக முதல்வர் பசவராஜைக் கண்டித்து தமிழக பாஜகவினர் உண்ணாவிரதம்: அண்ணாமலை அதிரடி

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை கண்டித்து தமிழக பாஜகவினர் உண்ணாவிரத அறப்போராட்டம்: அண்ணாமலை அதிரடி

மேகதாதுவில் கர்நாடகம் அணைக்கட்டும் என்று அம்மாநில புதிய முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளதை கண்டித்து தமிழக பாஜகவினர் சார்பில் வரும் 5ம் தேதி தஞ்சையில் உண்ணாவிரத அறப்போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • Share this:
கர்நாடகாவின் மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு அம்மாநில அரசு முயற்சி செய்துவருகிறது. தறபோது புதிதாக பதவியேற்றுள்ள முதல்வர் பசவராஜ் பொம்மையும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.  இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை கூறும்போது, கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக அணை கட்ட நினைக்கும் நிலையில், மேகதாதுவிற்கு ஒரு சிறிய செங்கலை கூட வைக்க விடமாட்டோம். தொடர்ந்து தமிழக பாஜக, தமிழக நலன் சார்ந்து செயல்படும் என கூறினார்.

எந்த காரணத்திற்காகவும் மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி ஆகஸ்ட் 5ஆம் தேதி டெல்டா பகுதியில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளோம்.  திமுகவின் தேர்தல் அறிக்கையில் மீனவர் சமூகத்திற்காக அறிவிக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நாளை (30-7-21) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். காங்கிரஸ் போன்று வீட்டில் உட்கார்ந்து கொண்டு மக்களுக்காக போராடும் கட்சி அல்ல பாஜக, நாங்கள் தேசியம் சார்ந்த கட்சி.

Also read: மாணவர்களுக்கு வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உடனடியாக வழங்க அரசு உத்தரவு

மேகதாதுவில் அணைக்கட்டுவது குறித்து கர்நாடக முதல்வர் சொன்னது தமிழக விவசாயத்தை அச்சுறுத்தும் ஒரு செயலாக இருக்கிறது. நாங்கள் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனவே கர்நாடகாவில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள பாஜகவைச் சேர்ந்த கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை கண்டித்து தஞ்சையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை  அதிரடியாக கூறியுள்ளார்.
Published by:Esakki Raja
First published: