SEEMAN - ELECTION RESULT: திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சீமானுக்கு 3-ம் இடம்

SEEMAN - ELECTION RESULT: திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சீமானுக்கு 3-ம் இடம்

சீமான்

சென்னை திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வரும் நிலையில் சீமானுக்கு 3-ம் இடம் கிடைத்துள்ளது.

  • Share this:
    ஏப்ரல் 6-ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை கிறிஸ்துவ கல்லூரி உள்பட தமிழகம் முழுவதும் 75 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

    முதல் சுற்று தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணி 81 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி பின்னடைவையே சந்தித்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்கிய நிலையில் அவருக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. அத்தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.குப்பன் முன்னிலை வகிக்கிறார். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் நாம் தமிழர் கட்சி பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த சுற்றுகள் அக்கட்சிக்கு எப்படி அமையும், சீமான் வெற்றி பெற்று சட்டசபைக்குள் செல்வாரா என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.
    Published by:Sheik Hanifah
    First published: