முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தாம்பரத்தில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்து - புதுமாப்பிள்ளை உட்பட 3 பேர் உயிரிழப்பு

தாம்பரத்தில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்து - புதுமாப்பிள்ளை உட்பட 3 பேர் உயிரிழப்பு

தாம்பரம் விபத்து

தாம்பரம் விபத்து

தாம்பரத்தில் அதிவேகமாக சென்ற ஆட்டோ சாலையின் நடுவே தடுப்பு சுவரில் மோதி, எதிர்திசை ஜிஎஸ்டி சாலையில் கவிழ்ந்து விபத்து.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தாம்பரம் அருகே 9 பேரை ஏற்றி சென்ற ஷேர் ஆட்டோ தடுப்பு சுவரில் மோதி விபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுமாப்பிள்ளை உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து பெருங்களத்தூருக்கு ஷேர் ஆட்டோ ஒன்றில் 9,பேரை ஏற்றி கொண்டு தாம்பரம் இருந்து இரும்புலியூர் சிக்னல் அருகே சென்று கொண்டிருக்கும்போது, சிக்னனில் ஆம்னி பேருந்து ஒன்று நின்று கொண்டு இருந்தது. அப்போது அதிவேகமாக சென்ற ஷேர் ஆட்டோ ஆம்னி பேருந்து மீது மோதாமல் இருப்பதற்காக ஆட்டோ ஸ்டேரிங் கை திருப்பியபோது, அதிவேகமாக சென்ற ஆட்டோ சாலையின் நடுவே தடுப்பு சுவரில் மோதி, எதிர்திசை ஜிஎஸ்டி சாலையில் ஆட்டோ கவிழ்ந்தது.

அப்போது பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த லாரி ஷேர் ஆட்டோவின் மீதுமோதியதில் ஆட்டோவில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் 3 பேர் பலத்த  காயமடைந்தனர்.மேலும் 2 பேர் லேசனாக காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து தகவல் அறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் காயமடைந்த நபர்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Also Read:  பிரசவத்தின்போது ஆசிரியை மரணம் - தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய  முதற்கட்ட விசாரணையில் கடலூர் பண்ருட்டியை சேர்ந்த  ஐசக் ராஜ் (வயது-51) இவர் சர்ச்சில் பாதிரியாராக உள்ளார்.  பெருங்களத்தூர் கொளப்பாக்கத்தை சேர்ந்த சுந்தர்ராஜ்(வயது 37) இவர்தனியார் நிறுவன பணிபுரிந்து வருவதாகவும்,மற்றொருவர் பாண்டிசேரியை சேர்ந்த நாகமுத்து(வயது36) இவர்பிரிண்டிங் பிரஸ் வைத்து நடத்தி வருபவர். இவர்கள் 3 பேரும் இந்தக் கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் என தெரியவந்தது.

திருவண்ணாமலையை சேர்ந்த எழுமலை(வயது-65), அதே பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது-27), மற்றும் பெருங்களத்தூரை சேர்ந்த ரஜினிகாந்த் (வயது-45) ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர் என்று தெரியவந்தது. உயிரிழந்த பாண்டிசேரியை சேர்ந்த நாகமுத்துவிற்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்த நிலையில் அவர் பலியான சம்பவம் பெரும் சோதனை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஷேர் ஆட்டோவை ஓட்டி வந்த ஓட்டுனர் விபத்தில் இருந்து தப்பிக்க ஆட்டோவில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார். தலைமறைவான ஆட்டோ டிரைவர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

செய்தியாளர்: சுரேஷ்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Accident, Auto, Chennai Police, Crime News, Death, Share Auto