• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோமாவிலிருந்து மீண்டு கொரோனாவால் உயிரிழந்த டேபிள் டென்னிஸ் வீரர்!

கோமாவிலிருந்து மீண்டு கொரோனாவால் உயிரிழந்த டேபிள் டென்னிஸ் வீரர்!

டேபிள் டென்னிஸ் வீரர் சந்திரசேகர்

டேபிள் டென்னிஸ் வீரர் சந்திரசேகர்

டேபிள் டென்னிஸில் விளையாட்டில் தமிழகம் தலைசிறந்து விளங்க காரணமாக இருந்த சந்திரசேகரன் மூன்று முறை தேசிய சேம்பியன் பட்டம் வென்று 80களில் சாம்பியனாக ஜொலித்துள்ளார்.

  • Share this:
முன்னாள் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சந்திரசேகர் கோமாவிலிருந்து மீண்டு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேபிள் டென்னிஸ் விளையாட்டில் 80களின் கதாநாயகனாக ஜொலித்தவர் சந்திரசேகரன். இவர் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸின் இரண்டாவது அலையால் விளையாட்டு உலகமே மீண்டும் முடங்கியுள்ளது. மூத்த வீரர்கள், பயிற்சியாளர்கள் கொரோனாவால்  அடுத்தடுத்து உயிரிழக்கின்றனர்.

டேபிள் டென்னிஸில் விளையாட்டில் தமிழகம் தலைசிறந்து விளங்க காரணமாக இருந்த சந்திரசேகரன் மூன்று முறை தேசிய சேம்பியன் பட்டம் வென்று 80களில் சாம்பியனாக ஜொலித்துள்ளார். பல்வேறு சர்வதேச வீரர்களையும் உருவாக்கியுள்ளார். பத்ம ஸ்ரீ சரத் கமல், அர்ஜூனா விருது வென்ற சத்தியன் ஆகியோர் இவரிடம் பயிற்சி பெற்றவர்கள் ஆவார்கள்.

16 வருடம் டேபிள் டென்னிஸ் விளையாட்டு கற்றுக்கொடுத்த சந்திர சேகரன் வாழ்க்கை முழுவதும் போராட்டமாகவே அமைந்ததாகவும், அவர் கோமாவிலிருந்து மீண்டு கொரோனாவில் உயிரிழந்தது ஒட்டுமொத்த இந்திய டேபிள் டென்னிஸ் உலகத்திற்கும் சோகமான நாள் என அர்ஜூனா விருது வென்ற டேபிள் டென்னிஸ் வீரர் சத்தியன் ஞானசேகரன் வேதனை தெரிவித்துள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: