Home /News /tamil-nadu /

ஆழ் கடலுக்குள் கிரிக்கெட்: மெய் சிலிர்க்க வைத்த நீச்சல் வீரர்கள்!

ஆழ் கடலுக்குள் கிரிக்கெட்: மெய் சிலிர்க்க வைத்த நீச்சல் வீரர்கள்!

ஆழ்கடலுக்குள் கிரிக்கெட்

ஆழ்கடலுக்குள் கிரிக்கெட்

ஆழ்கடலுக்குள் பாதுகாப்பு கவசங்களுடன் பேட்டிங், பௌலிங்,ஸ்டெம்பிங் என வீரர்கள் விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற நூதன முறையில் வாழ்த்து தெரிவித்தனர்.

ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற வேண்டி நேற்று சென்னை நீலாங்கரையில்  ஆழ்கடலுக்குள் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் temple adventure என்ற பெயரில்  ஆழ்கடல் பயிற்சி பள்ளி நடத்தி  வருபவர் அரவிந்த். உள்நாட்டவரும் வெளிநாட்டவரும் சுற்றுலா பயணிகளும் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த நிலையில்  ஐபிஎல் IPL போட்டியில் சென்னை Super kings அணி வெற்றி பெற வாழ்த்தி ஆழ்கடலுக்குள் கிரிக்கெட் விளையாட்டு  நடந்தப்பட்டது.

சென்னை நீலாங்கரை கடற்பகுதியில் 12 அடி ஆழத்தில்  ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த் மற்றும் நீச்சல் வீரர்கள் கிரிக்கெட் விளையாடினார்கள். ஆழ்கடலுக்குள் பாதுகாப்பு கவசங்களுடன் பேட்டிங், பௌலிங்,ஸ்டெம்பிங் என வீரர்கள் விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற நூதன முறையில் வாழ்த்து தெரிவித்தனர்.



இக்குழுவினர் ஏற்கனவே புதுச்சேரியை சேர்ந்த காவல் துறையினருக்கு ஆழ்கடல் நீச்சல் பயிற்சியை  அளித்து வருகின்றனர். முதல்கட்டமாக 11 பேர் பயிற்சி எடுத்து கொண்டனர்.புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகத்தில் இருந்து 6 கி.மீ.தூரத்தில் இவர்களுக்கு பயிற்சி அளித்த போது 40 அடி நீளமுள்ள சுறா மீன் வந்தது.



இதனை காவலர்கள் மிக அருகில் கண்டு ரசித்தனர்.புதுச்சேரியில்  காவலர்களுக்கு ஆழ்கடல் நீச்சல் பயிற்சி அளிக்கப்படுவது இதுவே முதல்முறை. இக்குழு ஏற்கனவே தமிழக கடலோர காவல்படை,தீயணைப்பு துறை, வனத்துறை, காவல்துறை ஆகியோருக்கு பயிற்சி அளித்துள்ளது என்பது குறிப்பிட தக்கது..

இதையும் படிங்க: சேலத்தில் அழகுநிலையம் வைத்திருந்த பெண் சூட்கேசில் சடலமாக மீட்பு 

Published by:Murugesh M
First published:

Tags: Beach, Cricket, CSK

அடுத்த செய்தி