Home /News /tamil-nadu /

போலீஸ்காரரின் எலும்புகளை உடைத்த Swiggy டெலிவரி பாய் - சென்னையில் பரபரப்பு சம்பவம்

போலீஸ்காரரின் எலும்புகளை உடைத்த Swiggy டெலிவரி பாய் - சென்னையில் பரபரப்பு சம்பவம்

Swiggy

Swiggy

சரியான நேரத்திற்கு உணவு கொடுக்காத ஆத்திரத்தில் காவலர் ஜார்ஜ் பீட்டர் உணவை பிடுங்கி குப்பைத் தொட்டியில் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் எழுந்த பிரச்சனை இருவருக்குள்ளும் கைகலப்பாக மாறி உள்ளது.

சென்னை கோடம்பாக்கம் காவல் நிலைய எழுத்தராகப் பணியாற்றி வருபவர் காவலர் ஜார்ஜ் பீட்டர்(54). இவர் எம்.ஜி.ஆர் நகர் பூலித்தேவன் தெரு, முதல் குறுக்குத் தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடித்து விட்டு தனது வீட்டுக்குச் சென்ற ஜார்ஜ் பீட்டர் ஆன்லைனில் உணவு வாங்கிக் கொள்ளலாம் என நினைத்து அதன் பேரில் ஸ்விக்கியில் போன்லெஸ் சிக்கன்(boneless chicken) மற்றும் சாப்பாடு ஆகியவற்றை ஆர்டர் செய்துள்ளார். இந்த நிலையில் இரவு 9 மணிக்கு வரவேண்டிய ஆர்டரானது,  தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. இதனால் காவலர் ஜார்ஜ் பீட்டர் டெலிவரி பாய்க்கு கால் செய்துள்ளார்.

அதற்கு டெலிவரி பாயும் தாங்கள் குறிப்பிட்ட லொகேஷனுக்கு தான் வந்துவிட்டதாகவும், ஆனால் தங்களது வீடு பற்றிய விவரம் சரியாக தெரியவில்லை எனவும் கூறி வீட்டு முகவரி குறித்து விவரங்களை கேட்டதாக தெரியவருகிறது. இதனையடுத்து இருவருக்கும் இடையே போனில் வாக்குவாதம் ஆகியுள்ளது. குறிப்பாக பூலித்தெருவில் மூன்றுக்கும் மேற்பட்ட கிளை தெருக்கள் இருந்ததால் அவரால் எளிதில் அடையாளம் காண முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் தெரிய வருகிறது.

Also read:  ஒரு இளைஞருக்காக +2 மாணவிகள் இருவர் நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டை - தனுஷ் பட பாணியில் சம்பவம்..

பின்னர் ஒருவழியாக 9.30 மணிக்கு மேல் வீட்டை கண்டறிந்த டெலிவரி பாய் பார்சலை கொடுப்பதற்காக ஜார்ஜ் பீட்டரின் வீட்டுக்கு சென்று உள்ளார். இந்த நிலையில் முகவரி கண்டுபிடிப்பதில் ஏற்கனவே ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக இருவருக்குள்ளும் மீண்டும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதனையடுத்து சரியான நேரத்திற்கு உணவு கொடுக்காத ஆத்திரத்தில் காவலர் ஜார்ஜ் பீட்டர் உணவை பிடுங்கி குப்பைத் தொட்டியில் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் எழுந்த பிரச்சனை இருவருக்குள்ளும் கைகலப்பாக மாறி உள்ளது.

கால் உடைந்த காவலர்


டெலிவரி பாய் தான் வைத்திருந்த ஹெல்மெட்டால் காவலர் ஜார்ஜ் பீட்டரின் தாடை மற்றும் காலில் ஹெல்மெட்டால் அடித்து விட்டு பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தாடையிலிருந்து ரத்தம் வந்த நிலையிலும் கால் நடக்க முடியாத சூழ்நிலையில் துடித்த காவலர் ஜார்ஜ் பீட்டரை உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் தாடை எலும்பு மற்றும் கால் எலும்பு உடைந்துள்ளதாகக் கூறி சிகிச்சை அளித்தனர்.

ஸ்விக்கி டெலிவரி பாய்


இந்த சம்பவம் குறித்து டெலிவரி பாய் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் எம்.ஜி.ஆர் நகர் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து டெலிவரி பாயை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்நபர் சென்னையை பூர்வீகமாக கொண்ட 24 வயதான கார்த்திக் வீரா என்பது தெரியவந்தது. மேலும் இவர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு ஸ்விக்கியில் டெலிவரி பாயாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

Also read:  சமந்தா ஸ்டைலை கையில் எடுத்த வனிதா விஜயகுமார்.. இது லிஸ்ட்லயே இல்லையே!

போலீசார் நடத்திய விசாரணையில், காவலர் ஜார்ஜ் பீட்டர் மது போதையில் இருந்ததாகவும் அதனால் தன்னிடம் பிரச்சினை செய்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் தெரிவித்த கார்த்திக் வீரா மேலும் காவலர் ஜார்ஜ் பீட்டர் தன்னை தாக்க முற்பட்டதன் காரணத்தால் தான் தானும் தாக்கியதாக கார்த்திக் வீரா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஸ்விக்கி நிறுவன டெலிவரிபாயான கார்த்திக் வீராவை கைது செய்த எம்.ஜி.ஆர்  நகர் போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் பிரச்சனையின் போது காவலர் ஜார்ஜ் பீட்டர் மது போதையில் இருந்தாரா என்பது குறித்தும் காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Arun
First published:

Tags: Chennai, Swiggy

அடுத்த செய்தி