முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நள்ளிரவில் சென்னையை குளிரவைத்த கோடை மழை - மகிழ்ச்சியில் மக்கள்!

நள்ளிரவில் சென்னையை குளிரவைத்த கோடை மழை - மகிழ்ச்சியில் மக்கள்!

மழை

மழை

Rain in Chennai : சென்னையில் நள்ளிரவில் பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

  • Last Updated :

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேலும் வலுப்பெற்று காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது. அதனைத் தெடர்ந்து, நேற்று முன்தினம் அது புயலாக மாறியது.

‘அசானி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் தமிழகத்தின் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, பெரியமேடு, நுங்கம்பாக்கம், கிண்டி, போரூர் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்துள்ளது. கோடை வெயில் வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திர காலத்தில், வெப்பத்தில் சிக்கித் தவித்த சென்னை மக்கள் நள்ளிரவில் பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், திருப்பத்தூர் ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி, வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 10 மணி முதல் இடி மின்னல் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. கன மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Must Read : மயிலாப்பூர் இரட்டைக் கொலை வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த காவல்துறைக்கு பேரவையில் முதலமைச்சர் பாராட்டு...

top videos

    இந்நிலையில், சுமார் 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதேபோல தமிழகத்தின் பல பகுதிகளில் நள்ளிரவில் ஆங்காங்கே மழை பெய்தது.

    First published:

    Tags: Chennai Rain, Rain, Summer