Home /News /tamil-nadu /

சென்னையில் அரிவாள், கத்திகளுடன் சுற்றி வந்த ரவுடிகளை தனி ஒருவனாக துரத்தி பிடித்த காவல் உதவி ஆய்வாளர்!

சென்னையில் அரிவாள், கத்திகளுடன் சுற்றி வந்த ரவுடிகளை தனி ஒருவனாக துரத்தி பிடித்த காவல் உதவி ஆய்வாளர்!

தனி ஆளாக இருந்த உதவி ஆய்வாளர் மருது காரை துரத்தி காரை ஓட்டிச் சென்ற அந்நபரை மடக்கி பிடித்தார். மேலும் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்கள் மற்றும் ஓட்டம் பிடித்த நபர்கள் தலைமறைவாகினர்.

சென்னையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வந்த ரவுடிகளை தனி ஒருவனாக துரத்தி பிடித்த காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுக்குள் குவிந்து வருகின்றன.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் நேற்றிரவு நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் மருது பாதுகாப்பு காரணங்களுக்காக தனது இரு சக்கர வாகனத்தில் ரவுண்ட்ஸ் சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது, சிவசண்முகம் சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான முறையில் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் சிலர் பேசிக்கொண்டிருந்துள்ளனர். காவல் உதவி ஆய்வாளர் மருதுக்கு சந்தேகம் வரவே அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

விசாரணையில்  அந்நபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்க இருசக்கர வாகனம் மற்றும் காரை உதவி ஆய்வாளர் மருது சோதனை செய்துள்ளார். அப்போது காரில் இரண்டு அடி நீளமுள்ள இரண்டு கத்திகள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களில் மூன்று பேர் இருசக்கர வாகனத்திலும் ஒருவர் காரிலும் மற்ற இருவர் ஓட்டம் பிடித்தும் தப்பி சென்றுள்ளனர். தனி ஆளாக இருந்த உதவி ஆய்வாளர் மருது காரை துரத்தி காரை ஓட்டிச் சென்ற அந்நபரை மடக்கி பிடித்தார். மேலும் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்கள் மற்றும் ஓட்டம் பிடித்த நபர்கள் தலைமறைவாகினர்.

மேலும் படிக்க: உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தமிழக மாணவர் இந்தியா திரும்ப விருப்பம்

இந்த நிலையில் காரில் தப்பி செல்ல முற்பட்ட நபரை காரோடு பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து உதவி ஆய்வாளர் மருது விசாரணை மேற்கொண்டதில் அவர் ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த செல்வமணி என்பது தெரியவந்தது. மேலும், தப்பியோடிய நபர்கள் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ரவுடிளான கணேசன், உதய பாண்டி, பரமசிவம் உள்ளிட்ட 5 நபர்கள் என்பது தெரியவந்தது.

தப்பியோடிய ரவுடி கணேசன் மீது நாங்குநேரி காவல் நிலையத்தில் இரட்டை கொலை வழக்கு நிலுவையில் உள்ளதும், மற்ற  நபர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்றவழக்குகள் நிலைவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இவர்கள் சென்னையில் யாரையேனும் கொலை செய்வதற்கு வந்தார்களா? கட்டப்பஞ்சாயத்து அல்லது பெரும் புள்ளிகள் யாரையேனும் மிரட்டி பணம் பறிக்க சென்னை வந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளையில் தப்பிச்சென்ற மற்ற நபர்களையும் நுங்கம்பாக்கம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தனி ஆளாக ரவுடிகளை துரத்தி சென்று அதில் ஒருவரை பிடித்த காவல் உதவி ஆய்வாளர் மருதுவின் செயலை காவல்துறையினர் பாராட்டி வருகின்றனர்.
Published by:Esakki Raja
First published:

Tags: Chennai

அடுத்த செய்தி