சென்னையின் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தெருநாய்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. தெருக்களில் நீக்கமற நிறைந்திருப்பதுடன் பிரதான சாலைகளிலும் கும்பலாக வலம் வருவதால் பொதுமக்கள் குறிப்பாக சிறுவர், சிறுமியர் இயல்பாக நடமாட அச்சப்படும் சூழல் உள்ளது.
வாகன ஓட்டிகள் திடீரென எங்கிருந்தோ ஓடிவரும் நாய்களின் எதிர்பாராத விரட்டல்களால் அலறி விபத்தில் சிக்குவதும் அதிகரித்துள்ளது. தெருவில் நடந்தும் செல்வோரையும், கூட்டமாகவோ தனியாகவோ துரத்திச் சென்று கடித்துவைக்கின்றன. இரவு நேரத்தில் எங்கிருந்து வந்து தாக்குகின்றன என்பதே தெரிவதில்லை.
2008-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னையில் 55,326 தெருநாய்கள் இருந்ததாகவும், தற்போது அவற்றின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Also read: தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை..
கொரோனா அச்சம் காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நாய்களுக்கு கருத்தடை செய்வது குறைந்தது, நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என சொல்லப்படுகிறது. ஊரடங்கால் சென்னையை காலி செய்த பலர். தாங்கள் வளர்த்த நாய்களை தெருவிலேயே விட்டு சென்றதும், சென்னையில் நாய் அதிகரிக்க காரணம் என்கிறார் விலங்குகள் நல ஆர்வலர் கீர்த்தனா.
வீட்டில் வளர்த்து ஏதோ காரணத்திற்காக ரோட்டில் விட்டுவிடுகின்றனர். பசி காரணமாக எந்த நாயும் குரைக்காது, கடிக்காது எனக் கூறும் கீர்த்தனா, ஏரியாவிற்கு புதிய நபர் என்றாலோ, அவருடைய செய்கையில் வித்தியாசம் இருந்தாலோ, அல்லது தங்களின் பாதுகாப்பிற்கோ தான் நாய்கள் குரைக்கும் என்கிறார். நாய்கள் வெறுமனே குறைப்பதை பார்த்து பயந்து ஓடக்கூடாது எனவும் அறிவுறுத்துகிறார்.
இந்த புகார்களையெல்லாம் பார்த்த சென்னை மாநகராட்சி சிறப்பு முகாம்கள் மூலம் நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. இந்த வேகம் போதாது என்றும் பணிகளை முடுக்கிவிட வேண்டும் என்றும் சென்னைவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாய்த் தொல்லை அதிகமாக இருந்தால் 1913 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.