• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அம்மா உணவகங்களில் சப்பாத்தி விற்பனை நிறுத்தம் : காரணம் என்ன?

அம்மா உணவகங்களில் சப்பாத்தி விற்பனை நிறுத்தம் : காரணம் என்ன?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அம்மா உணவகங்களில் சப்பாத்திக்குப் பதிலாக தக்காளி சாதம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுகிறது.

  • Share this:
    ஏழை-எளிய மக்கள் மலிவு விலையில் வயிறார சாப்பிடும் வகையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது அம்மா உணவகம். இந்நிலையில், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இரவு நேரத்தில், சப்பாத்தி விற்பனை நிறுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக இட்லியும், தக்காளி சாதமும் வழங்கப்பட்டு வருகிறது.

    அம்மா உணவகங்களில் நாள்தோறும் 3 வேளையும் ஏழை மக்களுக்கு சுடச்சுட உணவு வழங்கப்பட்டு வருகிறது. காலையில் இட்லி 1ரூபாய்க்கும், மதிய வேளைகளில் எலுமிச்சை சாதம், கறிவேப்பிலை சாதம், சாம்பர் சாதம், தக்காளி சாதம் என கலவை சாதங்கள் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இரவு வேளையில் சப்பாத்தி (2 எண்ணிக்கையில்) 3 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், திமுக ஆட்சி அமைந்தாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், ஏழை எளியோரின் நலனை கருத்தில் கொண்டு, அம்மா உணவகங்கள் தொடர்ந்து வழக்கம்போலவே இயங்கி வந்தன. சென்னையில் வார்டுக்கு 2 அம்மா உணவகம் வீதம் 200 வார்டுகளில் 400 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. அத்துடன், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை என நகரில் உள்ள 7 அரசு மருத்துவமனைகளிலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    அம்மா உணவகங்களுக்கான நிர்வாக பொறுப்பு பெருநகர சென்னை மாநகராட்சியின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அம்மா உணவகங்களில் இரவு வேளையில் சப்பாத்தி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

    அதற்கு பதிலாக தக்காளி சாதம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுகிறது. சில உணவகங்களில் இட்லியும், தக்காளி சாதமும் வழங்கப்படுகின்றன. அம்மா உணவகங்களுக்கு கோதுமை சப்ளை நிறுத்தப்பட்டு இருப்பதால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    Must Read : அம்மா உணவகங்களில் ஆட்குறைப்பு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு: அண்ணா அறிவாலயம் முன்பு ஊழியர்கள் போராட்டம்!

    அதேபோல அம்மா உணவகங்கள் மூலம் மாநகராட்சிக்கு 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அம்மா உணவகங்களின் மூலம் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்கும் முயற்சியாக சப்பாத்திக்கான கோதுமை மாவு வழங்குவது நிறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: