ஈஸ்டர் வழிபாடு முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டு 3ம் நாள் உயிர்த்தெழும் நாளான ஈஸ்டர் பண்டிகை உலகெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது. இதை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் விரதம் கடைபிடிப்பார்கள். இதன்அடுத்த நிகழ்வாக ஈஸ்டர் திருநாளுக்கு முந்தைய வியாழன் பெரிய வியாழனாகவும் வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாகவும் கடைபிடிக்கப்படுகிறது.
ஈஸ்டர் திருநாளை கொண்டாடும் வகையில் சென்னையில் உள்ள சாந்தோம், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயம், பெரம்பூர் லூர்து மாதா ஆலயம், லஸ் தேவாலயம், உள்ளிட்ட தேவாலயங்களில் அதிகாலை முதல் சிறப்பு திருப்பலிகளும் ஆராதனைகளும் நடைபெற்றன.
இதை பற்றி பேசிய பக்தர் ஒருவர் , "கொரோனா தொற்று சற்று குறைந்து 2 வருடம் கழித்து நாங்கள் குடும்பமாக சென்னை பெசன்ட் நகர் தேவாலயத்தில் வழிபட வந்தோம். இவை எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. ஈஸ்டர் திருநாள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன்" என தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.