காரில் ‘வருமான வரித்துறை’ பெயர் பலகையுடன் கஞ்சா கடத்தல் பெண் உட்பட இருவர் கைது!

கஞ்சா கடத்தல்

போலீஸை பார்த்ததும் காரில் இருந்த ஒரு நபர் இறங்கி தப்பியோடி விட்டார். காரில் பெண்ணுடன் இருந்த நபரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காரில் சோதனையிட்டபோது ஒருகிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

  • Share this:
வருமான வரித்துறை என பெயர் பலகை கொண்ட காரில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பெண் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை சூளைமேடு பகுதியில் கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் சூளைமேடு  பகுதியில் போலீசார் நேற்று இரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, வருமானவரித்துறை என்று பலகை வைக்கப்பட்ட கார் வந்தது. ஆனால் கார் நம்பர் பிளேட் அரசுப் பதிவெண் இல்லாமல் டிராவல்ஸ்சுக்கு சொந்தமான மஞ்சள் நிறத்தில் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை மடக்கி நிறுத்தி சோதனை நடத்தினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது காரில் இருந்த ஒரு நபர் இறங்கி தப்பியோடி விட்டார். காரில் பெண்ணுடன் இருந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். காருக்குள் சோதனை நடத்திய போது உள்ளே ஒரு கிலோ கஞ்சா பார்சல் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் காரின் உள்ளே இருந்த பெண்ணின் பெயர் வாணி (34) என்றும் சென்னை கொரட்டூர் பவானி நகரைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. மேலும் அவருடன் வந்த நபர் பெயர் கோயம்பேட்டைச் சேர்ந்த முருகன் (25) என்றும் தெரியவந்தது.

இதையும் படிங்க: முன்னாள் நண்பனை கொலை செய்து உடலை தூக்கி சென்ற இந்நாள் நண்பர்கள் - பகீர் பின்னணி!


அரசு பெயர் பலகையுடன் கஞ்சாவை கடத்தி வந்தால் போலீசார் பிடிக்கமாட்டார்கள் என்பதால் கஞ்சாவை காரில் கடத்தி வந்ததாக வாணி தெரிவித்தார். அதனையடுத்து போலீசார் வாணியின் கொரட்டூர் வீட்டில் சோதனை நடத்தி 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய நபர் பெயர் பிரகாஷ் என்பதும் அவர் வாணியின் 2வது கணவர் என்பதும் தெரிய வந்தது. வாணியின் முதல் கணவர் நந்தகோபால் இறந்து விட்டதால் வாணி பிரகாசுடன் தற்போது வாழ்ந்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது.

மேலும் படிக்க: தடையை மீறி செயல்பட்ட சரவணா செல்வரத்தினம் கடை: மாநகராட்சி எச்சரிக்கை!


வருமானவரித்துறை உதவி ஆணையருக்கு ஆக்டிங் கார் டிரைவராக பணிபுரிந்து வந்த பிரகாஷ் ரகசியமாக கஞ்சா கடத்தல் தொழிலும் செய்து வந்துள்ளார். நேற்று தனது மனைவியுடன் அந்த காரில் கஞ்சாவை கடத்திக் கொண்டு நண்பர் முருகனுடன் வந்த போது போலீசைக் கண்டதும் தப்பியோடி விட்டார்.

உதவி ஆணையர் வெளியூர் சென்றதால் அவரது காரில் கஞ்சா கடத்தி வந்ததாகவும் மனைவி வாணி போலீசில் தெரிவித்துள்ளார். அதனையடுத்து கார் மற்றும் 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கைதான இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Murugesh M
First published: