• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் தொழில் உரிமம் ரத்து- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் தொழில் உரிமம் ரத்து- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

பிளாஸ்டிக் தடை

பிளாஸ்டிக் தடை

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள், வணிக வளாகங்களுக்கு அபராதங்களை அறிவித்துள்ள சென்னை மாநகராட்சி, 4வது முறையாக விற்பனையில் ஈடுபட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

  • Share this:
    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை  மாநகராட்சி எச்சரித்துள்ளது.

    தமிழகத்தில்  சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக தமிழ்நாடு அரசால் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல்  ஒருமுறை  பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல்,  விநியோகித்தல், விற்பனை செய்தல் மற்றும் உபயோகித்தல் ஆகியவற்றிக்கு முற்றிலும் தடை  விதிக்கப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதற்கு மாற்றாக வாழையிலை, பாக்குமர இலை,  அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை, கண்ணாடி, உலோகத்தால் ஆன குவளைகள்,  மூங்கில்/ மரப்பொருட்கள், காகிதக் குழல்கள், துணி/காகிதம்/ சணல் பைகள், காகிக/ துணி கொடிகள், பீங்கான் பாத்திரங்கள்,மண் கரண்டிகள் மற்றும் மண் குவளைகள் போன்ற 12 வகையான பொருட்களை பயன்படுத்தலாம் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: சென்னையின் முக்கிய பகுதிகளில் சனிக்கிழமை (ஆகஸ்ட் - 28) மின்தடை!


    இந்தநிலையில் அரசின் அறிவுறுத்தல்களை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பவர்களிடம் இருந்து பொருட்களை பறிமுதல் செய்தும், அபராதம் விதிக்கவும், தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யவும் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேல் நிலையில் உள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்களிடம் இருந்து பெறக்கூடிய அபராத தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,

    1. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்தல், சேமித்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு முதல் முறை ரூ.25,000, இரண்டாவது முறை ரூ. 50,000 மற்றும் மூன்றாவது முறை ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

    மேலும் படிக்க: Tamilஐ Tamizh ஆக மாற்ற வேண்டும்: சட்டமன்றத்தில் கோரிக்கை!


    2. துணிக் கடைகள் வணிக வளாகங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களுக்கு முதல்முறை ரூ. 10,000, இரண்டாவது முறை ரூ.15,000, மற்றும் மூன்றாவது முறை ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்.

    3. அங்காடிகள் மற்றும் மருந்தகங்களுக்கு முதல் முறை ரூ.1000, இரண்டாவது முறை ரூ.2000, மற்றும் மூன்றாவது முறை ரூ. 5000 அபராதம் விதிக்கப்படும்.

    4. சிறு வணிக அங்காடிகளுக்கு முதல் முறை ரூ.100, இரண்டாவது முறை ரூ.200, மற்றும் மூன்றாவது முறை ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

    அதேபோல் மூன்று முறை அபராதம் விதிக்கப்பட்ட பின்னும் விதியை மீறி நான்காவது முறை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனம் மற்றும் அங்காடிகளுக்கு தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அதுமட்டுமின்றி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒருவாரத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 1,390 கிலோ கிராம் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 லட்சத்து 23 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: