ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

8 வயது சிறுமிக்கு 6 மாதகாலமாக பாலியல் தொல்லை... சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர் கைது

8 வயது சிறுமிக்கு 6 மாதகாலமாக பாலியல் தொல்லை... சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர் கைது

கைது செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர் ராஜன்

கைது செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர் ராஜன்

போக்சோ வழக்கு பதிந்து ராஜனை கைது செய்த கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

8 வயது சிறுமிக்கு 6 மாதகாலமாக பொது கழிவறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர் ஒருவர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, சேத்துப்பட்டு புதிய பூபதி நகர் பகுதியில் உள்ள பொது கழிப்பறைக்குள் நேற்று மாலை 50 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் எட்டு வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுக் கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அங்கு சென்ற நபர்கள் இந்த சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, அந்த நபரை அடித்து இழுத்து வந்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க - LPG cylinder price hike | வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 50 உயர்வு... ரூ.1000ஐ கடந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி

கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் ஆலந்தூர் சாமியார் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜன்(49) என்பதும், இவர் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது.

இதையும் படிங்க - Shawarma: தஞ்சையில் ஷவர்மா சாப்பிட்ட மருத்துவ மாணவர்கள் 3 பேர் மயக்கம்.. தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை

மேலும், கடந்த 8 மாத காலமாக சேத்துப்பட்டு புதிய பூபதி நகர் பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறையை சுத்தம் செய்யும் பணியில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதும், கடந்த ஆறு மாத காலமாக சிறுமிக்கு இவர் பொது கழிப்பறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து போக்சோ வழக்கு பதிந்து ராஜனை கைது செய்த கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Crime News