Home /News /tamil-nadu /

ஆபாச வீடியோ.. பாலியல் வன்கொடுமை - சென்னையில் துணை நடிகைக்கு நேர்ந்த கொடூரம்

ஆபாச வீடியோ.. பாலியல் வன்கொடுமை - சென்னையில் துணை நடிகைக்கு நேர்ந்த கொடூரம்

சென்னை சம்பவம்

சென்னை சம்பவம்

Actress Sexually Abused | துணை நடிகையை மிரட்டி பணம் பறித்தால் வெளியில் சொல்ல மாட்டார் என நினைத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கைதானவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை வளசரவாக்கத்தில் கத்தியை காட்டி மிரட்டி துணை நடிகையிடம் பணம் நகை பறித்த வழக்கில் இருவர் கைது. பலாத்காரம் செய்ததும் விசாரனையில் அம்பலம்..

    சென்னை வளசரவாக்கம், ஏ.கே.ஆர். நகரை சேர்ந்தவர் விஜயலட்சுமி(35). சினிமா துணை நடிகையான இவரது வீட்டிற்கு   இரவு இரண்டு நபர்கள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 10 கிராம் நகை,50 ஆயிரம்  பணத்தை பறித்து கொண்டு மேலும் அவரது ஆடைகளை கலைந்து அவரை வீடியோ எடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து விஜயலட்சுமி வளசரவாக்கம் போலீசில் அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் துரைராஜ் தலைமையில் போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    மேலும் விஜயலட்சுமியிடம் விசாரித்தபோது தனக்கு அடிக்கடி மீன் கொடுக்கும் செல்வகுமார் குரல் போல் இருந்ததாக தெரிவித்ததையடுத்து வளசரவாக்கத்தை சேர்ந்த செல்வகுமார் (வயது22), அவரது நண்பர் கண்ணதாசன்(37), ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கண்ணதாசன் ஏற்கனவே விஜயலட்சுமிக்கு பழக்கமான நண்பர் என்பதால் அவரது வீட்டிற்கு அடிக்கடி மீன் இறைச்சி  தேவை என்பதால் கொண்டு சென்று கொடுத்து வந்துள்ளார்.

    மீன் கொடுக்க வரும்போதெல்லாம் வீட்டில் விஜயலட்சுமி தனியாக இருப்பதை அறிந்து அவரிடம் நகை, பணம் இருப்பதை தெரிந்து கொண்டதாகவும் எனவே அவரிடமிருந்து நகை, பணத்தை பறிக்க வேண்டும் என்ற நோக்கில் சம்பவத்தன்று கண்ணதாசன் தனது நண்பரான செல்வகுமாரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது விஜயலட்சுமி கதவை திறந்தபோது அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி விஜயலட்சுமியை பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பிறகு நடந்ததை வெளியில் செல்லாமல் இருப்பதற்காக விஜயலட்சுமியை செல்போனில் ஆபாசமாக வீடியோ பதிவு செய்து கொண்டு அவரிடம் இருந்த நகை மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து நகை, பணம், கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விஜயலட்சுமியை கற்பழித்ததாக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் வழிப்பறி செய்தல், மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பறித்து சென்ற 10 கிராம் நகை பறிமுதல் செய்துள்ளதனர். கண்ணதாசனுக்கு பணத் தேவை இருந்ததால் துணை நடிகையை மிரட்டி பணம் பறித்தால் வெளியில் சொல்ல மாட்டார் என நினைத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டு 2 பேர்  கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: சோமசுந்தரம்
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Actress, Crime News, Sexual abuse, Sexual harassment

    அடுத்த செய்தி