ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திமுக கூட்டணி 200 வார்டுகளையும் கைப்பற்றும் - அமைச்சர் சேகர்பாபு

திமுக கூட்டணி 200 வார்டுகளையும் கைப்பற்றும் - அமைச்சர் சேகர்பாபு

அமைச்சர் சேகர்பாபு (கோப்புப் படம்)

அமைச்சர் சேகர்பாபு (கோப்புப் படம்)

Urban Local Body Election : சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முழுமையாக கைப்பற்றும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முழுமையாக கைப்பற்றும் என  அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

  சென்னை வால்டாக்ஸ் சாலையில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, வருகின்ற 23ஆம் தேதி வடபழனி முருகன் கோவில் குடமுழுக்கு நிகழ்வை நடத்த வேண்டும் என்று முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.

  இருப்பினும் அன்றைய தினம் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து தமிழக முதல்வர் இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறினார்.

  கடந்த 8 மாதகால ஆட்சி அனைவருக்குமான நல்லாட்சி என்பதை முதல்வர் நிரூப்பித்துள்ளதால் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.

  இந்நிலையில், உத்தரப் பிரதேசம் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல்கள் நிறைவடைந்தவுடன் தற்போது மாற்றமடையாமல் உள்ள பெட்ரோல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடகடவென உயரும் என மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

  Must Read : தனது ஆடைகளை திருடியதாக இளைஞர் தனுஷ் மீது நடிகை நிக்கி கல்ராணி போலீசில் புகார்

  பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திகள் இடம் பெறாதது தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் அடையாளங்களை மறைக்க மத்திய அரசு திட்டமிட்டு சதி செய்வதாக குற்றம் சாட்டினார்.

  Read More : தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவு குறித்து முன்பே ட்விட்டரில் குறிப்பிட்ட செல்வராகவன்?

  மேலும் தேர்தல் காரணமாகவே பெட்ரோல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தற்போது மாற்றம் இல்லை என்று தெரிவித்த அவர் தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என சாடினார்.

  Published by:Suresh V
  First published:

  Tags: DMK Alliance, Local Body Election 2022, Minister Sekar Babu