Home /News /tamil-nadu /

மாற்றுக்கருத்துக்கு இடம் அளிப்பதே ஆரோக்கியமானதாக இருக்கும்... கி.வீரமணியை சந்தித்த பின் சேகர்பாபு பேட்டி

மாற்றுக்கருத்துக்கு இடம் அளிப்பதே ஆரோக்கியமானதாக இருக்கும்... கி.வீரமணியை சந்தித்த பின் சேகர்பாபு பேட்டி

கேகர் பாபு - கி.வீரமணி

கேகர் பாபு - கி.வீரமணி

Sekar Babu met veeramani : சிவராத்திரியை முன்னிட்டு சென்னை கபாலீஸ்வரர் கோவில் சார்பில் நாளை மாலை முதல் மறுநாள் காலை வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிவராத்திரியை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து நிகழ்ச்சிகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என, பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை சந்தித்த பின் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உடன் இணைந்து சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும் எனவும் அதை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். இதனை கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி காட்டமான அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை அமைச்சர் சேகர்பாபு சந்தித்து விளக்கம் அளித்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் அறிக்கையை மாற்றுக் கருத்தாக கருதுவதாகவும் அவரின் கருத்தை ஏற்பதாகவும் கூறிய அமைச்சர். மாற்றுக்கருத்துக்கு இடம் அளிப்பதே ஆரோக்கியமானதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

    இந்நிலையில், கபாலீஸ்வரர் கோவில் சார்பில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு நாளை மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

    சிவராத்திரி விழாவை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது குறித்து கோவில் இணை ஆணையர் காவேரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நிகழ்ச்சிக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் கழிப்பிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

    Must Read :  நெருப்புடா... நெருங்குடா பார்ப்போம்.. மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கோவையில் பரபரக்கும் போஸ்டர்

    மயிலாப்பூரில் அமைந்துள்ள ஏழு சிவன் கோவில்களுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு சிவராத்திரியை முன்னிட்டு கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த இணை ஆணையர், ஒரே நேரத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் நிகழ்ச்சிகளை கண்டு களிக்கும் முடியும் என்றும் தெரிவித்தார்.

    நேரடியாக வர முடியாத பக்தர்கள் யூடியூப் வாயிலாக கண்டு கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் அதன்படி பக்தர்கள் https://www.youtube.com/MYLAPOREKAPALEESWARARTEMPLE இணைப்பில் காணலாம் என்றும் தெரிவித்தார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: K.Veeramani, Maha Shivaratri, Minister Sekar Babu, Mylapore Temple

    அடுத்த செய்தி