10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் மயானங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை: அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு

கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் மயானங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டியுள்ளார்

கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் மயானங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டியுள்ளார்

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக  உயிரிழப்போர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. அதேவேளையில், உயிரிழந்தவர்களின் சடலங்களை  மயானங்களில் எரியூட்ட நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.  ஒருசில மயானங்களில் சடலங்கள் நீண்ட வரிசையிலும் கிடத்தி வைக்கப்பட்டுள்ளன.

  இந்நிலையில்,சென்னை ஓட்டேரி மற்றும் அயனாவரம் பகுதியில் உள்ள மயானங்களை இந்து சமய அறநிலையத்துறை  அமைச்சர் சேகர்பாபு மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு , மயானங்களில் சடலங்களை  எரிப்பதற்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை தாண்டி கூடுதலாக கட்டணம் வசூலிக்க கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறினார் .

  பராமரிப்பில்லாத மயானங்கள் இன்னும் 10 நாட்களுக்குள்  சீர் செய்யப்படும் என்று தெரிவித்த அவர், எல்பிஜி கேஸ் இணைப்பு மூலம் சடலங்களை  எரிப்பதற்கான வசதி தேவையான மயானங்ககளில் செய்யப்படும்  என உறுதி அளித்தார்.

  சடலங்களை  எரிப்பதற்கு மக்கள் சிரமப்படக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியுடன் இருப்பதாக கூறிய, அவர் கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் மயானங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று விமர்சித்தார்.

  முன்னதாக ஓட்டேரி மயானத்தில் அமைச்சர் ஆய்வு செய்தபோது பராமரிப்பில்லாத காரணத்தால் ,பிணத்தை எரிக்கின்ற போது புகை கூண்டு வழியாக புகை வராமல் தகன மேடை அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் புகை வெளியேறியது.

  இது ஆய்வுக்கு வந்திருந்த அமைச்சர் மற்றும் நாடளுமன்ற உறுப்பினர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது . இதனைத்தொடர்ந்து உடனடியாக புகைக்கூண்டு வழியாக புகை வெளியே செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: