மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தி.மு.க. சார்பில் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு தொடரப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குழு நியமிக்கப்பட்டு, அதன் பரிந்துரை அடிப்படையில், மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு எதுவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதையும் படிக்க: ஆங்கிலம், இந்தியில் மட்டுமே திறனறி தேர்வா? : மாநில மொழிகளிலும் நடத்த சு.வெங்கடேசன் கடிதம்
திமுக சார்பில், “தமிழக அரசின் இட ஒதுக்கீடை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்யவே குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும், மத்திய அரசின் 27 சதவீத இட ஒதுக்கீடு என்பது மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் 69 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், நீதிமன்ற உத்தரவின்படி குழு அமைக்கப்பட்டு, இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்படவில்லை என்றும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியாக இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாதிரியாக இடஒதுக்கீடு பின்பற்ற முடியாது என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும் படிக்க: ஆகஸ்ட் 30 முதல் மதுரையில் இருந்து முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கம்
பொருளாதார ரீதியில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு உச்ச நீதிமன்ற ஒப்புதல் பெற வேண்டும். இல்லாவிட்டால் அது அனுமதிக்கத்தக்கதல்ல என்று தெரிவித்து இந்த வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.