சென்னை மணலியில் குறைந்த விலையில் விற்பனை செய்வதாக ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் கார் பைக் படம் ஆர்சி புக் உள்ளிட்டவை வெளியிட்டு மோசடி செய்த கும்பல் சிக்குமா?
ஆன்லைனில் பொருள்களை வாங்கும் பழக்கம் தற்போது அதிகமாகிவிட்டது. வீடு தேடி பொருள்களை கொண்டு வந்து தருகிறார்கள் தேவையில்லாத அலைச்சல் குறையும் என்பதால் பலர் ஆன்லைன் ஷாப்பிங்கை விரும்புகிறார்கள். பயன்படுத்திய கார்கள், பைக் ஆகியவற்றை விற்பனை செய்யவும், வாங்குவதற்கும் நிறைய இணையதளங்கள் வந்துவிட்டது. விற்பனை செய்பவரின் முகவரி விற்பனைக்கு வரும் கார், பைக் ஆகியவற்றின் படங்களை அப்லோடு செய்யப்பட்டிருக்கும். சமீபகாலமாக இணையதளத்தில் கார்,பைக் படம் ஆர்சி புக் உள்ளிட்டவை வெளியிட்டு மோசடி செய்வதாக பல்வேறு புகார்கள் வந்த நிலையில் மேலும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.
Also Read: கூலிப்படையை ஏவி மருமகனை தீர்த்துக்கட்டிய மாமியார்.. வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்த போலீஸார்
சென்னை மணலி சேர்ந்த மாயாண்டி (வயது 30) என்பவர் பழைய இருசக்கர வாகனம் வாங்குவதற்காக இணையதளத்தில் தேடியுள்ளார். அப்போது பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் வசிக்கும் சிவசாந் மல்லப்பா என்பவர் ராணுவ அதிகாரி என்றும் தற்போது மாற்றலாகி செல்வதால் இருசக்கர வாகனம் விற்பனை செய்ய படுவதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதை பார்த்து உண்மை என்று நம்பிய மாயாண்டி ஹோண்டா ஆக்டிவா 5ஜி வாகனத்தை 24 ஆயிரம் ரூபாய்க்கு தருவதாக கூறியதின் பேரில் 24 ஆயிரம் ரூபாய் பணத்தை கூகுள் பே மூலம் அனுப்பியுள்ளார்.
மேலும் இருசக்கர வாகனம் ஆர்மி போஸ்டல் சர்வீஸ் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்கு ரூபாய் 14000 ரூபாய் அனுப்பும் படியும் பின்னர் அந்த பணத்தை திருப்பி அனுப்புவதாக கூறி உள்ளார். இதனைநம்பி 14 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி உள்ளார். இந்நிலையில் ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்படுவது உணர்ந்த மாயாண்டி அந்த நபரிடம் இருசக்கர வாகனம் வேண்டாம் பணத்தை திருப்பித்தர கேட்டுள்ளார் அதற்கு அந்த நபர் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டு போன் அழைப்பை துண்டித்து உள்ளார்.
Also Read: 3 ஆண்களுடன் தகாத உறவு.. தட்டிக்கேட்ட கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய பெண்
இதுகுறித்து மாயாண்டி மாதாவரம் பால் பண்ணை துணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இதுகுறித்து விசாரணை நடத்தி மோசடி நபரைத் தேடி வருகின்றனர். இதுபோல் சென்னையில் பலர் கார் பைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வந்த விளம்பரத்தை வைத்து பணத்தைக் கொடுத்து ஏமாந்து வருகிறார்கள். அந்த கும்பலை பிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பணத்தை பறிகொடுத்தவர் கோரிக்கை வைத்துள்ளார்.
செய்தியாளர்: அசோக் குமார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bike, Cheating, Crime News, Online crime, Tamil News