Home /News /tamil-nadu /

கேம் விளையாட செல்போன் தராததால் பள்ளி மாணவன் தற்கொலை

கேம் விளையாட செல்போன் தராததால் பள்ளி மாணவன் தற்கொலை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கேம் விளையாட போனை தரமறுத்ததால் மாணவன் தற்கொலை செய்துகொணட சம்பவம் வண்ணாரப்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னையில் கேம் விளையாட செல்போன் தராததால் பள்ளி மாணவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    சென்னை,வண்ணாரப்பேட்டை பெரிய பாளையத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவா( வயது 42) இவரது  மகன் விமல் குமார்( வயது 16) கொண்டி தோப்பில் உள்ள பள்ளியில்  ப்ளஸ் 1- படித்து வந்தார். இந்நிலையில்  தொடர்ந்து செல்போனில் கேம் விளையாடி வந்ததையடுத்து  அவரது தாயார் கண்டித்து செல்போனை பிடுங்கி ஒளித்து வைத்துள்ளதாக தெரிகிறது. நேற்று மாலை வீட்டருகே உள்ள  தனது உறவினர் இறுதி சடங்கிற்கு சிறுவனின் தாயார் சென்றுவிட்டு வீடு திரும்பிய பொழுது கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்தது.

    நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிய படி  மாணவன் விமல்குமார் இருந்துள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

    Also Read:  தனியார் நிறுவனத்தில் ரூ.47 லட்சம் பண மோசடி செய்த குடும்பம்- ரம்மி சூதாட்டத்தில் எல்லாவற்றையும் இழந்ததாக வாக்குமூலம்

    வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கேம் விளையாட போனை தரமறுத்ததால் மாணவன் தற்கொலை செய்துகொணட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: அசோக் குமார்

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Addicted to Online Game, Chennai, Commit suicide, School student

    அடுத்த செய்தி