ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னை : பேருந்தில் பள்ளி மாணவர்கள் அட்டூழியம்... பெண் பயணி மீதும் தாக்குதல்... கைது செய்ய வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

சென்னை : பேருந்தில் பள்ளி மாணவர்கள் அட்டூழியம்... பெண் பயணி மீதும் தாக்குதல்... கைது செய்ய வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

மாதிரி படம்

மாதிரி படம்

பேருந்தில் கலாட்டா செய்ததைத் தட்டிக் கேட்ட பெண் பயணியை அவர்கள் தகாத வார்த்தையால் திட்டியதும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சென்னையில் பேருந்து படியில் தொங்கியவாறு பயணம் செய்ததை தட்டிக்கேட்ட நடத்துனர், ஓட்டுநரை தாக்கிய பள்ளி மாணவர்களை கைது செய்ய வலியுறுத்தி, போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  சென்னை அண்ணாசதுக்கத்தில் இருந்து பெரம்பூர் நோக்கி, மாநகர பேருந்து ஒன்று சனிக்கிழமை பிற்பகல் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து புரசைவாக்கத்தை அடைந்தபோது ஈ.எல்.எம். பள்ளி மாணவர்கள் சிலர் ஏறினர். அவர்களில் பத்துக்கும் மேற்பட்டோர் படியில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம் செய்ததுடன், பாட்டு பாடி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பேருந்தில் கலாட்டா செய்ததைத் தட்டிக் கேட்ட பெண் பயணியை அவர்கள் தகாத வார்த்தையால் திட்டியதும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

  Also Read : தேனியிலிருந்து சபரிமலை செல்லும் போக்குவரத்தில் மாற்றம் - காவல்துறை அறிவிப்பு

  இதில், ரத்த காயம் ஏற்பட்ட அந்த பெண் பேருந்திலேயே மயக்கம் அடைந்தார். இதுகுறித்து தட்டிக்கேட்ட பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநரையும் மாணவர்கள் தாக்கிவிட்டு தப்பியோடினர். இதனால், ஆத்திரமடைந்த ஓட்டுநர் பேருந்தை சாலையில் நிறுத்தியதுடன், பயணிகளுடன் சேர்ந்து மறியலில் ஈடுபட்டார்.

  Also Read : “இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48 திட்டம்” முதல்வர் ஸ்டாலின் தொடங்கிய திட்டத்தின் சிறப்பம்சங்கள்

  இதற்கு ஆதரவாக அவ்வழியாக வந்த 70-க்கும் மேற்பட்ட பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துனர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அங்கு வந்த போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என கூறி, தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், பெரம்பூர் - புரசைவாக்கம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Chennai