முகப்பு /செய்தி /தமிழ்நாடு / SBI ATM | எஸ்.பி.ஐ. வங்கி ஏடிஎம்களில் நூதன கொள்ளை.. முக்கிய குற்றவாளி கைது..

SBI ATM | எஸ்.பி.ஐ. வங்கி ஏடிஎம்களில் நூதன கொள்ளை.. முக்கிய குற்றவாளி கைது..

SBI ATM | எஸ்.பி.ஐ. வங்கி ஏடிஎம்களில் நூதன கொள்ளை.. முக்கிய குற்றவாளி கைது..

எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் பணம் திருடப்பட்டது தொடர்பாக ஹரியானாவில் தலைமறைவாக இருந்த ஒருவரை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இருசக்கர வாகனத்தில் வரும் இருவர் தலைக்கவசம், மற்றும் முக கவசத்துடன் எஸ்.பி.ஐ ஏடிஎம் மையத்தை மட்டுமே குறிவைத்து வருகின்றனர். அந்த மையத்தில் வாடிக்கையாளர்கள் பணம் டெப்பாசிட் வைக்கும் இயந்திரம் உள்ளதா என்று நோட்டம் விடுகின்றனர். பணம் டெப்பாசிட் இயந்திரத்தில் பணம் எடுக்க முடியும் என்பதால், அந்த இயந்திரத்தில் அதிகப்படியாக ஒரு நேரத்தில் எவ்வளவு தொகை எடுக்க முடியுமோ அந்த தொகையை தங்கள் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி எடுக்க முயல்கிறது அந்த கும்பல். அதன் பிறகு தான் கும்பலின் மோசடி அரங்கேறுகின்றது.

இயந்திரத்தில் தாங்கள் பதிவிட்ட தொகை வந்தவுடன், பணம் இருக்கும் இடத்தின் அருகே உள்ள நீல நிற வெளிச்சத்துடன் கூடிய சென்சாரை கையால் மறைத்து விட்டு வெளியே வந்த தொகையை எடுத்து விடுகின்றனர். 20 நொடிகள் சென்சாரை மறைத்து வைத்திருப்பதால் வெளியே வந்த தொகையை யாரும் எடுக்கவில்லை என்று கணக்கில் கொள்கின்றது சென்சார் இயந்திரம்.

இயந்திரத்தில் வெளியே வந்த தொகை எடுத்தது சென்சார் இயந்திரத்திற்கு தெரியாததால், மீண்டும் எடுக்கப்பட்ட தொகை வாடிக்கையாளரின் வங்கி கணக்கிற்கே வரவு வைக்கப்படுகிறது இந்த முறையை மீண்டும் மீண்டும் செய்து கடந்த 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் மட்டும் தரமணி, வடபழனி, விருகம்பாக்கம், பெரிமேடு போன்ற இடங்களில் ரூ.48 லட்சம் வரை திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஓ.கே.ஐ என்ற ஜப்பான் நிறுவனம் தயாரித்த ஏடிஎம் இயந்திரத்தில் மட்டுமே இந்த கொள்ளை அரங்கேறியிருப்பது தெரியவந்துள்ளது. எஸ்பிஐ வங்கி பயன்படுத்தும் ஏடிஎம் இயந்திரங்கள் ஜப்பானிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய வகை இயந்திரங்கள் என்றும் இதில் இத்தகைய குறைகள் இருப்பது அதிர்சியானது என்றும் தெரிவிக்கின்றனர் வங்கி அதிகாரிகள் .

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் படிக்க... சூர்யாவின் நீட் அரசியல்.. கதையல்ல வரலாறு

மேலும் ஏடிஎம் மையங்களில் பாதுகாவலர்கள் நியமிக்கப்படாதது தான் இத்தகைய குற்றங்களுக்கு முதல் காரணம் என்று சொல்லும் வங்கி கூட்டமைப்பு அதிகாரிகள் முறையான பாதுகாப்பு வழிமுறைகளை வங்கிகள் கடைபிடிக்க வேண்டும் என்கின்றனர்.

' isDesktop="true" id="487651" youtubeid="A7ulmKaJGEI" category="chennai-district">

இதனிடையே எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் பணம் திருடப்பட்டது தொடர்பாக ஹரியானாவில் தலைமறைவாக இருந்த ஒருவரை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட நபரை டெல்லிக்கு அழைத்து சென்று விசாரிக்க உள்ளதாகவும் கொள்ளையில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருவதாகவும் தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர். ஏடிஎம்களில் பணம் திருடப்பட்டது தொடர்பாக சென்னையில் மட்டும் 16 புகார்கள் வந்துள்ளதாக கூறிய போலீசார், அதில் முறையான ஆவணங்களுடன் 7 புகார்கள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்..

First published:

Tags: Chennai, Crime | குற்றச் செய்திகள், Robbery, SBI ATM