Home /News /tamil-nadu /

சென்னையில் செய்தி டிவி சேனல் அலுவலகத்தில் புகுந்து, பட்டாக்கத்தியைக் காட்டி மர்ம நபர் தாக்குதல்..

சென்னையில் செய்தி டிவி சேனல் அலுவலகத்தில் புகுந்து, பட்டாக்கத்தியைக் காட்டி மர்ம நபர் தாக்குதல்..

தாக்குதலில் ஈடுபட்ட நபர்

தாக்குதலில் ஈடுபட்ட நபர்

Sathiyam TV Office Attack: தனது கையிலிருந்த கிட்டார் பேக்கை திறந்து அதனுள் பெரிய பட்டாக்கத்தி மற்றும் கேடயத்தை எடுத்து தொலைக்காட்சி நிறுவனத்தின் வரவேற்பறையில் இருந்த கண்ணாடி ,மேஜை, டிவி, இருக்கைகள், கம்ப்யூட்டர் ஆகியவற்றை மர்ம நபர் உடைக்க தொடங்கினார்.

மேலும் படிக்கவும் ...
சென்னையில்  செய்தி  தொலைக்காட்சி அலுவலகத்தில் புகுந்து  பட்டாக்கத்தியுடன் தாக்குதலில்  ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

ராயபுரம் கல்மண்டபம் பகுதியில்  செய்தி நிறுவனமான சத்தியம் தொலைக்காட்சி  இயங்கி வருகிறது. இன்று மாலை 7 மணியளவில் குஜராத் பதிவெண் கொண்ட ஷிஃப்ட் காரில் வந்த மர்ம நபர் ஒருவர் கையில் ஒரு கிட்டார் பேக்குடன் அலுவலகத்திற்குள் சென்றுள்ளார்.

அலுவலக ஊழியர்கள் கேட்டபோது, அலுவல் ரீதியாக வந்ததாக அந்த மர்ம நபர் கூறியதால் அலுவலக விருந்தினர் என நினைத்த ஊழியர்கள் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதித்துள்ளனர். வரவேற்பறைக்கு சென்ற அந்த மர்ம நபர் பேசிக்கொண்டிருக்கும்போது தனது கையிலிருந்த கிட்டார் பேக்கை திறந்து அதனுள் பெரிய பட்டாக்கத்தி மற்றும் கேடயத்தை எடுத்து வரவேற்பறையில் இருந்த கண்ணாடி ,மேஜை, டிவி, இருக்கைகள், கம்ப்யூட்டர், கதவு என அங்கு இருந்த அனைத்து பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அலுவலக ஊழியர்கள் அவரை பிடிக்க முற்படும்போது, "அருகே வந்தால் கொலை செய்து  விடுவதாக மிரட்டிய அவர்,  வரவேற்பறையில் இருந்த அனைத்து பொருட்களையும் கத்தியால் வெட்டி சேதப்படுத்தி உள்ளார்.
உடனடியாக ராயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தவுடன் காவலர்கள் விரைந்து வந்து அந்த மர்ம நபரை பிடித்து அவரிடம் இருந்த பட்டாக்கத்தி, கேடயம் மற்றும் குஜராத் பதிவெண் கொண்ட ஷிப்ட் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநரை கொலை செய்ய வேண்டும் எனக் கூறிக்கொண்டு மர்ம நபர் காரில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் படிக்க: ரேஷன் அட்டையில் பெண்களை குடும்ப தலைவியாக மாற்றினால்தான் பணம் கிடைக்குமா? அமைச்சர் கொடுத்த அப்டேட்!
போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்ட அந்த மர்மநபர் கோயம்புத்தூரை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பது தெரியவந்தது.

இவர் சில தினங்களுக்கு முன் குஜராத்தில் இருக்கும் தனது சகோதரரை சந்திப்பதற்காக குஜராத் சென்றுள்ளார். அங்கே ஆன்லைனில் கத்தி மற்றும் கேடயம் ஆகியவற்றை ஆர்டர் செய்து அவற்றை வாங்கிக் கொண்டு, சகோதரர் காரை எடுத்துக் கொண்டு நேரடியாக சென்னை வந்து சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு சென்று தாக்குதல் நடத்தியதும் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: மாயமான தொழிலதிபர்.. திசை மாறிய வழக்கு.. கோடியில் கொள்ளை - பாமக பிரமுகர் கொலை நடந்தது எப்படி?


இந்த சம்பவம் பற்றி சத்தியம் தொலைக்காட்சி சி.இ.ஓ ஷாம் செய்தியாளர்கள் சந்திப்பில், "மூன்று நாட்களுக்கு முன்பு அலுவலகத்திற்கு ஒரு மிரட்டல் போன் கால் வந்ததாகவும் அப்போது அந்த நபர் சத்தியம் தொலைக்காட்சியை அடித்து நொறுக்கி விடுவதாகவும் கூறியதாக" தெரிவித்தார்.

மேலும், எதற்காக ராஜேஷ்குமார் இத்தகைய தாக்குதலில் ஈடுபட்டார் என்பது குறித்தும், யாருடைய தூண்டுதலின் பேரில் இவர் இத்தகைய செயலை செய்துள்ளார் எனவும் ராயபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Murugesh M
First published:

Tags: Attack, Chennai, Crime | குற்றச் செய்திகள், News On Instagram, TV Channel

அடுத்த செய்தி