• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அதிமுக பொன்விழா கொண்டாட்டங்கள்.. ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலா

அதிமுக பொன்விழா கொண்டாட்டங்கள்.. ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலா

வி.கே.சசிகலா

வி.கே.சசிகலா

மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் அண்ணா சமாதிகளுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்த முடிவு செய்துள்ளார்.

  • Share this:
    அதிமுகவின் பொன்விழாவை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடம் மற்றும் ராமாபுரம் தோட்ட இல்லத்தில் வி.கே. சசிகலா மரியாதை செலுத்த உள்ளதால் பாதுகாப்பு கேட்டு சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரது தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

     

    சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து வெளியில் வந்த சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தார். ஆனால், அவர் ஜெயலலிதாவின் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகக் கூறி பின்வாங்கினார். சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பிறகு அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசிய சசிகலா தான் விரைவில் கட்சியை கவனித்துக் கொள்ள வந்துவிடுவேன் என்று கூறி வந்தார்.

    இந்தநிலையில் அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டங்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி சனிக்கிழமையன்று மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் அண்ணா சமாதிகளுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்த முடிவு செய்துள்ளார். மறுநாள் 17-ந் தேதியன்று தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்திற்கு செல்ல உள்ளார். அதே நாளில் ராமாபுரம் தோட்ட இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்து, எம்ஜிஆர் வாய் பேசாத காது கேளாதோர் பள்ளியில் மாணவர்களுடன் மதிய உணவு சாப்பிடவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக பாதுகாப்பு கேட்டு சசிகலா தரப்பில் சென்னை காவல் ஆணையரகம் மற்றும் தியாகராய நகர் காவல் ஆய்வாளரிடம் தனித்தனி மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதிமுகவின் தென் சென்னை மாவட்ட முன்னாள் இணை செயலாளர் வைத்தியநாதன் என்பவர் அளித்துள்ள அந்த மனுக்களில் சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டுள்ளார்.

    நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனால் அதிமுகவிற்கு வலுவான ஒற்றைத் தலைமையை தொண்டர்கள் எதிர்பார்ப்பதாகவும், அது ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரில் ஒருவரா அல்லது சசிகலாவா என்பதை காலம் தான் தீர்மானிக்கும் என்றும் மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்கள் மற்றும் எம்ஜிஆரின் நினைவு இல்லத்திற்கு சசிகலா செல்வதற்கு காவல்துறை அனுமதி வழங்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அண்ணா சமாதிகளுக்கு சென்று மாலை அணிவிக்கும் சசிகலா அதன் பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: