Home /News /tamil-nadu /

சென்னையில் போகி பண்டிகையன்று நெகிழி, டயர்களை எரித்தால் ரூ.1000 அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை

சென்னையில் போகி பண்டிகையன்று நெகிழி, டயர்களை எரித்தால் ரூ.1000 அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை

விதிகளை மீறி நெகிழி பொருட்கள் எரிக்கப்படுகிறதா என அனைத்து மண்டலங்களிலும் கண்காணிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சென்னையில் போகி பண்டிகையையொட்டி நெகிழி, டயர்களை எரித்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

    போகி பண்டிகை 'பழையன கழித்து, புதியன புகவிடும்' என்று காலம்காலமாக சொல்லப்படுகிறது. அதாவது இந்த நாளில் பழையவற்றையும், தேவை இல்லாததையும் தூக்கி எறிவது மக்களின் வழக்கம். இந்த நாளில், தேவையில்லாத பழைய டயர், பிளாஸ்டிக் பொருட்களையும் மக்கள் சேர்த்து எரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போகியன்று விதிமுறைகளை மீறி டயர், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் எரிக்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி அவ்வாறு எரித்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also read:  மனைவியை மாற்றி உல்லாசம்: சிக்கும் தமிழக பிரபலங்கள்

    அனைத்து மண்டலங்களிலும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் 15 மண்டலங்களுக்கும் சென்னை மாநகராட்சி சார்பாக இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

    இதற்கு முன்பாக தொடர்ந்து இந்த அறிவிப்பு இருக்கும். ஆனால் இந்த முறை அபராதத்துடன் எச்சரிக்கை கொடுக்கக்கூடிய வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விதிகளை மீறி நெகிழி பொருட்கள் எரிக்கப்படுகிறதா என அனைத்து மண்டலங்களிலும் கண்காணிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க:Omicron | பூஸ்டர் தடுப்பூசிகளால் பயனில்லை - உலக சுகாதார நிறுவன வல்லுநர்கள் அதிர்ச்சித் தகவல்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Chennai, Chennai corporation, Pongal

    அடுத்த செய்தி